Sunday, June 11, 2006

மேலும் ஒரு இந்தியப் புடவை வியாபாரி காணாமல் போயுள்ளார்

I came across this news piece in BBC tamil service page. Like the tamilnadu fishermen's issue across the Palk Straight, smalltime travelling Indian businessmen's issue has also been neglected by the Indian High commission. While Indian government is worried about Indian oil companies in Sri Lanka, it simply neglects the individual businessmen, who are also indian citizens.

இலங்கை கிழக்கில் மேலும் ஒரு இந்தியப் புடவை வியாபாரி காணாமல் போயுள்ளார்

கல்முனை பிரதேசத்தில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்திய புடவை வியாபாரியொருவர் கடந்த 7 ம் திகதி முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்

தமிழ்நாடு சிவகாசியைச் சேர்ந்த பி.பிரகாஷ் என்ற குறித்த வியாபாரி காணாமல் போனது தொடர்பாக சக வியாபாரியான ஜி.இராஜகோபால் என்பவரால் தேசிய மணித உரிமகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

சம்பவ தினம் திருக்கோவில் விநாயகபுரத்திற்கு வியாபாரத்தின் நிமித்தம் இவர் சென்றதாகவும் அதன் பின்பு இது வரை திரும்பவில்லை என்றும் முறைப்பாட்டாளர் கூறுகின்றார்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் இந்திய புடவை வியாபாரிகள் 4 பேர் இப்படி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். துப்பர்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் உடல் வாழைச்சேனை பிரதேசத்தில கண்டெடுக்கப்டப்டது.

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?