Thursday, June 15, 2006

நண்பனா? பகைவனா?

நாராயணசுவாமி என்னும் நிருபர் டெய்லிஇந்தியா.கொம் என்ற தளத்திலே வெப்ஈழம்.கொம் பற்றி
Pro-LTTE website attacks Karunanidhi என்று கட்டுரை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலே தற்போது முதலமைச்சராக உள்ள கருணாநிதி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளத் திட்டமிட்டே நாராயணசாமி போன்றவர்களும் பிளாக்குகளிலே சிலரும் எழுதுகிறார்களா? நாராயணசாமி பிரபாகரனை ஒரு முறை சந்தித்ததுடன் ஒரு புத்தகம் எழுதிய நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்ஈழம்.கொம் தள நிருவாகிகள், எட்டப்பர்.கொம் தளம் நடத்துகிறவர்கள்போல யாரென்றே தெரியவில்லை. இவையெல்லாம் ஈழ ஆதரவு, விடுதலைப்புலிகள் ஆதரவு போன்ற போர்வையுடன், அதற்கு எதிர்விளைவுகளைத் தரும் நோக்கத்துடன் பிளான் பண்ணி ஈழத்தமிழர் எதிர்ப்பாளர்களால் நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது.

ஈழத்தமிழர்கள்குறித்து ஆதரவும் பரிதாபமும் ஏற்படும்போது எல்லாம் சிங்களமக்களின்மீது குண்டுவெடிப்பதும் டெய்லிஇந்தியா.கொம் போன்றவற்றிலே வரும் கட்டுரைகளும் தற்செயலானவை மட்டுமா?

Comments:
யூலியன் இதை வாசிக்கவும்
I want amicable solution to Lanka issue: Karunanidhi
http://www.rediff.com/news/2006/jun/15ltte1.htm

நாராயணசுவாமி ஜெயலலிதா நண்பன்
 
யூலியன்,
www.webeelam.com எனும் இணையத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான[Official]இணையத்தளம் இல்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திரு. நாரயணன்சுவாமி அவர்கள் குறிப்பிடும் இணையத்தளம் யாரால் நடாத்தப்படுகின்றது என எனக்குத் தெரியாது. ஆனால் இது தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்படும் தளம் இல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆகவே அத் தளத்தில் வரும் செய்திகள் அத் தளத்தை நடாத்துபவர்களின் கருத்தே ஒழிய , விடுதலைப் புலிகளின் கருத்தோ அன்றி ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் கருத்தோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் எனது ப்ளாக்கரில் எழுதுவது என் சொந்தக்கருத்தே. நான் ஒரு ஈழத்தவன் என்பதற்காக, என் தனிப்பட்ட கருத்தை ஒட்டுமொத்த ஈழத்தவர்களின் கருத்தாகவோ அல்லது விடுதலைபுலிகளின் கருத்தாகவோ பார்க்க முடியாதோ , அதே போலத்தான் இத் தளத்தின் கருத்துக்களும்.

கலைஞர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள பல இலட்சம் ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன். ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டலும் உபத்திரம் செய்யும் அளவுக்கெல்லாம் கலைஞர் போகமாட்டார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான்.

இதைப்பற்றி நான் கலைஞரிடமே [தொலைபேசியில்]கேட்டுவிட்டு பதில் எழுதுகிறேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி
 
யூலியன்,

//தமிழ்நாட்டிலே தற்போது முதலமைச்சராக உள்ள கருணாநிதி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளத் திட்டமிட்டே நாராயணசாமி போன்றவர்களும் பிளாக்குகளிலே சிலரும் எழுதுகிறார்களா? //

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கக் கூடும். காரணம், www.eelamweb.com எனும் தளம் ஈழத்தமிழர் மற்றும் விடுதலைபுலிகள் ஆதரவுத்தளம். ஆனால் திரு.நாரயணன்சாமி குறிப்பிடும் www.webeelam.com தளம் அண்மையில் முளைத்த தளம். அத்துடன் இன்னொரு விடயத்தைப்பார்த்தீர்களா? தளத்தின் பெயரையே மக்களைக் குழப்புவதற்காக சொல்லைமாற்றி வைத்துள்ளனர் என்றே நான் நினைக்கிறேன். இதுவும் சிங்கள உளவுப்பிரிவினரின் வேலை என்ற சந்தேகம் எனக்கும் வலுக்கிறது.

குறிப்பாக ஈழத்தமிழர்களும் , தமிழகத்தமிழர்களும் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி
 
-வெப்ஈழம்.கொம் தள நிருவாகிகள், எட்டப்பர்.கொம் தளம் நடத்துகிறவர்கள்போல யாரென்றே தெரியவில்லை. இவையெல்லாம் ஈழ ஆதரவு, விடுதலைப்புலிகள் ஆதரவு போன்ற போர்வையுடன், அதற்கு எதிர்விளைவுகளைத் தரும் நோக்கத்துடன் பிளான் பண்ணி ஈழத்தமிழர் எதிர்ப்பாளர்களால் நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது
-
இது உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமிருக்கிறது
 
இந்த நாராயணசுவாமி 'Tigers of Lanka' என்று ஒரு புத்தகம் எழுதினார். அதற்காக ஈழத்தில் புலிகளுடன் பலநாட்கள் இருந்தவர்மட்டுமல்ல வே.பிரபாகரனையும் ஒருமுறை (ஒரே ஒரு முறை) சந்தித்தவர்.
பின்னர் என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு 'Inside an Elusive Mind - Prapakaran" என்ற ஒரு புத்தகம் எழுதினார். அதில் ஒன்றும் புதிதாக இல்லை. முன்னர் எழுதிய 'Tigers Of Lanka' வை மீண்டும் வெறு ஒழுங்கில் எழுதியது தான் இந்தப்புதிய புத்தகம்.
ஆனால் அதன் தலைப்பிலிள்ளது போல் அல்ல!
ஆனால் மகிந்த ராஜபக்ஷ அரசு பதவி ஏற்றதும் புலிகளுடன் பேச்சுக்காக தமது குழுவினருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஹாவாட் பல்கலைக்கழக வல்லுனர்களை அழைத்திருந்தது. அவர்களுடன் ஏதோ வழியில் இவரும் இணைந்துகொண்டார். எவ்வாறு, எத்தகமைகளை கொண்டு என்பது புதிராகவே உள்ளது. அத்துடன் இவர் இலங்கை செல்லும்போது 'Inside the Elusive Mind' பல பிரதிகளை கொண்டு சென்று பெச்சுவார்த்தைக் குழுவுக்கும் வழங்கினார். அதனால் அப்புத்தகம் விற்பனை அதிகரித்தது.
அன்றிலிருந்து இவர் இலங்கை/ஈழ விவகாரங்களில் ஏதே வகையில் கருத்துச் சொல்லி வருகிறார். சிலவேளைகளில் ஒன்றுமில்லாத சிறிய விடயங்களைக்கூட ஊதிப்பெரிதாக்குவது உட்பட.
 
Sabesan from Germany is one of the
person who is running this web eelam
chana
 
அந்த எழிலன், தனக்கு "சிந்தனைச் செல்வர்" எண்டும் ஒரு பட்டத்தை வைச்சுக்கொண்டு எழுதிறார். எண்டபடியா அவர் சொல்லிறது சரியாத்தான் இருக்கும்.

நானும் பாக்கிறன், குறிப்பிட்ட தளங்கள் மீது இந்தா வழக்குப்போடுறம், நிப்பாட்டுறம் புடுங்கிறம் எண்டு கனபேர் சொல்லித்திரிஞ்சும் ஒண்டும் நடக்கேல. நிதர்சனம் சம்பந்தமாக டக்ளஸ், புளொட், ஆனந்தசங்கரி முதற்கொண்டு -ஏன் சிறிலங்கா அரசாங்கமே நேரடியாகப் பிரச்சினைப்பட்டது. நிதர்சனம் மேல் சட்ட நடவடிக்கை எடுப்போம் எண்டு வாய்கிழியச் சொன்னவயள். இண்டை வரைக்கும் ஒரு மண்ணுமில்லை.
இதுக்குள்ள நிதர்சனம் நடத்திறவரோட இண்டைக்கும் தொடர்புவைச்சுக்கொண்டிருக்கிற ஒருத்தர் இங்க வலைப்பதிவுகளில வாய்கிழிய புலியெதிர்ப்புப் புராணமும் நிதர்சனம், எட்டப்பர்.கொம் பாசிசத்தளங்கள் பற்றியும் கத்திக்கெர்ணடிருக்கிறார்.

இதுகளெல்லாம் என்னத்தைச் சொல்லுது? இத்தளங்கள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டுமென்பதில் புலியெதிர்ப்புக்கும்பல்கள் பெருவிருப்புடன் இருக்கின்றன.
 
வெப்ஈழம்.கொம், யேர்மனில் வசிக்கும் சபேசன் என்பவருடையது. தமிழ் தேசவிரோதிகளின் நடவடிக்கைகளை ஆராய்வது அல்லது வெளிக்கொணர்வது என்ற பெயரில், அவர்களின் நடவடிக்கைகளை மக்கள் முன் கொண்டு செல்வதே இவர் நோக்கமாக இருக்கலாம். அது போல எட்டடப்பர், நிதர்சனம், சிபர்நியூஸ் என்பன நேர்வே நாட்டில் வசிக்கும் செது என்பவரால் நடாத்தப்படுகின்றது. இவர் நிதர்சனத்தை மட்டுமே நேரடியாக நடாத்துகின்றார். ஏனையவை சிலரூடாக நடாத்தப்படுகின்றது. நிதர்சனம்.கொம் அளவுக்கு மீறிய, தேசப்டபற்றை வெளிப்படுத்தவதாகம் தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தொனிப்பொருளில், வெளிவருகின்றது. லண்டனில் காண்டீபன் என்பவரும், கனடாவில், தமிழ் இளையோர் பேரவை, மலரவன் என்பவரும் இதற்கு ஆக்கள் எழுது கின்றனர். அல்லது, அவர்களது ஆக்கத்தை நிதர்சனம் வேறெங்கிலும் இருந்து பிரதி செய்கின்றது. எட்டப்பர் இணையம் சமூக விரோதிகைள அறிமுகப்படுத்தி சமூதாயத்தில் அவர்கள் கையோங்க உதவும் ஓர் தமிழ் தேசியத்தின் பெயரால் வெளிவரும் இணையம். இவை அனைத்துமே, முன்னர் "தினமுரசு" செய்த கைகாரியங்களை, தினமுரசின் சுயரூபம் வெளிவந்த பின்னர் செய்கின்றனர். நிதர்சனம் குழுவுக்கும், வலைப்பதிவாளர் திரு சிறீரங்கன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளது எனலாம்.
 
கலைஞர் கருணாநிதி பற்றிய செய்தி ஏற்படுத்திய தாக்கங்கள்!

"கலைஞர் தமிழினத்திற்கு மீண்டும் துரோகம்" என்னும் தலைப்பில் வெப்ஈழத்தில் வெளியிடப்பட்ட செய்தி சில விவாதங்களை தோற்றுவித்துள்ளது. இச் செய்தி எம்மால் தமிழ்நாட்டில் உள்ள பல ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. பல ஊடகங்கள் இச் செய்தியை உடனடியாக வெளியிட்டன. குறிப்பாக ஜெயா ரிவி இச் செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது. அதன் பிற்பாடு இச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்தியா, சிறிலங்காவைச் சேர்ந்த ஆங்கில, சிங்கள ஊடகங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டன. இந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதி இலங்கைப் பிரச்சனையில் திமுக மீது வீண் பழி போடுவதைக் கண்டிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். "தமது சொந்தத் தொலைக்காட்சியில் பித்தலாட்ட செய்திகளை ஒளிபரப்பி, ஆட்சியில் மீண்டும் அமர்ந்து, தமது சர்வாதிகாரத்தை நடத்த முடியவில்லையே என்ற கோபத்திலும் தாபத்திலும் திமுகவை உலகத் தமிழர்களின் முன்னால் குற்றம் சாட்டி நிறுத்தி வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் விஷமப் பிரச்சாரம் செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தனது அறிக்கையில் கலைஞர் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் இந்தச் செய்தி ஏற்படுத்திய தாக்கம் இவ்வாறு இருக்க, சில ஈழத் தமிழர்கள் இச் செய்தியை வேறு மாதிரிப் பார்த்தார்கள். "கலைஞர் ஈழத் தமிழரை கை விட மாட்டார்" என்று இன்றுவரை நம்புகின்ற இவர்கள் எம்மை அணுகி, இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். தற்போதுள்ள நிலையில் கலைஞரை ஆத்திரப்படுத்துவது போன்று செய்திகளை வெளியிடுவது கெட்டிக்காரத்தனமான செயல் அல்ல என்று அவர்கள் அறிவுரை சொன்னார்கள். கலைஞர் ஈழத் தமிழருக்கு ஆதரவானவர் என்பதை எமக்கு எடுத்து விளக்க முற்பட்டார்கள்.

ஆனால் கலைஞர் குறித்து எமது பார்வை சரியானது என்று உடனடியாகவே நிருபணம் ஆனது. ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை கலந்த கொள்ள விடாது கலைஞர் தடுத்தார். இதன் மூலம் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஈழத் தமிழர் முகத்தில் கலைஞர் கரியைப் பூசி்னார்.

ஆயினும் எமது சில ஊடகங்களும் கலைஞர் குறித்த நம்பிக்கையை காரணம் இன்றிக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. இலங்கைப் பிரச்சனை குறித்து கலைஞர் வெளியிட்ட அறிக்கையை இந்த ஊடகங்கள் திரித்து வெளியிட்டன. தலையங்கத்தை மாற்றியும், சில பகுதிகளை வெட்டியும் வெளியிட்டன. இதன் மூலம் கலைஞர் ஈழத் தமிழருக்கு ஆதரவானவர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க இந்த ஊடகங்கள் முனைகின்றன. அத்துடன் மருத்துவர் ராமதாஸ் பேரணியில் திடீரென கலந்து கொள்ள மறுத்ததன் காரணத்தை ஆராய்வதற்கும் இந்த ஊடகங்கள் முன்வரவில்லை. கலைஞரின் மனம் கோணாது நடக்க வேண்டும் என்பதில் இந்த ஊடகங்கள் மிகக் கவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் கலைஞர் மனம் மாறி ஈழத் தமிழர்களை ஆதரிப்பார் என்கின்ற நம்பிக்கையே காரணம்.

கலைஞர் குறித்த இவர்களின் நம்பிக்கை உண்மையாகவும், எமது கருத்து தவறாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எமது ஆசையும். இவர்களின் நம்பிக்கையை உண்மையாக்கி, எம்மைப் போன்றவர்களின் முகத்தில் கலைஞர் கரியை பூசுவார் ஆகில், அது எமக்கு பெரு மகிழ்ச்சியையே கொடுக்கும்.

இதே வேளை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இன்னும் ஒரு முக்கிய விடயம் உண்டு. வெப்ஈழத்தில் வெளிவந்த பரந்தன்ராஜன் சம்பந்தப்பட்ட செய்தியை ஜெயா ரிவி போன்ற ஊடகங்கள் வெளிக்கொணர்ந்ததற்கு முக்கிய காரணம், கலைஞருக்கு ஒரு நெருக்கடியை கொடுப்பதே ஆகும். ஆனால் சில சிங்கள, இந்திய ஊடகங்கள் இந்த விடயத்தை ஒரு பிரித்தாளும் தந்திரமாக பாவிக்க முற்பட்டன. இந்தியாவின் பிரபல அரசியல் ஆய்வாளராகிய நாராயண் ஸ்வாமி "புலிகள் ஆதரவு இணையம் கருணாநிதி மீது கடும் தாக்கு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே எழுதி விட்டார். மற்றைய இந்திய, சிங்கள ஊடகங்களும் கலைஞருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மோதல் என்பது போன்று செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதித் தள்ளின. இதன் மூலம் ஈழத் தமிழருக்கும் கலைஞருக்கும் உள்ள இடைவெளியை மேலும் பெருதாக்கிவிடவே இந்த ஊடகங்கள் முயன்றன.

ஆனால் எமது இணையத்தை ஊன்றி வாசிப்பவர்கள் இது விடுதலைப்புலிகளின் இணையம் அல்ல என்பதனையும், தனித்துவமான கருத்துக்களோடு சுதந்திரமாக இயங்குகின்ற ஒரு இணையம் என்பதனையும் புரிந்து கொள்வார்கள். ஆயினும் வெப்ஈழத்தில் வெளிவந்த செய்தியை இந்த ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டதன் மூலம் ஒரு மிகப் பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது. இனிமேல் பரந்தன்ராஜனால் தமிழ்நாட்டில் முன்பைப் போல் செயற்பட முடியாது. பரந்தான்ராஜன் தற்பொழுது தலைமறைவாகி விட்டதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. பரந்தன்ராஜன் தமிழகத்தில் கருணா குழுவிற்கு ஆட்களை திரட்டுவது தடைபட்டு போயுள்ளது. ஆகவே ஒரு ஊடகமாக நாம் செய்ய வேண்டிய கடமையை சரியான முறையில் செய்து இருக்கிறோம் என்பதில் நாம் திருப்தி அடைகிறோம்.
_________________
இனவிடுதலையும் பகுத்தறிவும் எம் இரு கண்கள்

www.webeelam.com
 
http://www.tribuneindia.com/2006/20060622/main5.htm
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?