Thursday, June 29, 2006

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

பிபிசியிலே சொல்லப்பட்ட செய்தி. தமிழ்க்கிறிஸ்தவர்கள் இதனால் மகிழ்ச்சியும் இறும்பூதும் எய்துவார்கள் என்பது நிச்சயம். According to tradition catholics believe that Christianity was first introduced into India by St. Thomas, one of the twelve Apostles of Jesus Christ.

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் புகழ்பெற்ற சாந்தோம் புனித தோமையர் தேவாலயம், பன்னாட்டு புனிதத்தலமாக அறிவிக்கப்படுவதற்கான ஆரம்பகட்ட அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது.

உலக அளவில், யேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீது மட்டுமே தேவாலயங்கள் எழுப்பபட்டுள்ளன. அதில் சாந்தோம் தேவாலயமும் ஒன்று.

இந்தியாவில் கிறித்துவத்தை பரப்பிய யேசுவின் சீடரான புனித தோமையாரின் கல்லறை மீது கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம், இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் தொன்மைக்கு ஒரு அடையாளமாக விளங்குவதாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய சாந்தோம் தேவாலயத்தின் வரலாற்று சிறப்புகளையும், சர்வதேச முக்கியத்துவத்தையும் விளக்கும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.

Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?