Sunday, December 02, 2007

for whom the bell tolls, sir?

இந்து பத்திரிகை புரொண்ட்லைன் என்ற மாதம் இரு முறை வரும் சஞ்சிகையையும் நடத்துகிறது. இந்து ஸ்ரீலங்கா அரசின் பத்திரிகைகள் வெளியிடுவதை தான் செய்தியாகவும் வெளியிடும். கருத்தாகவும் கொஞ்சம் மாற்றி வெளியிடும். தன்னை India's National Newspaper என்று சொல்லிக்கொள்ளும். அதேபோல இந்துவின் செய்திகளையும் கருத்தையும் எடுத்து ஸ்ரீலங்காவின் அரசுச்செய்திதாள் Daily News இந்தியாவின் கருத்தாக வெளியிடும். டெயிலி நியூசும் தன்னை Sri Lanka's National Newspaper என்று சொல்லிக்கொள்ளும்.

இந்த பத்திரிகைகளின் செய்தியாளர்களும் ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் தமது அரசுகளின் கருத்தையும் தமது விருப்பத்தையும் தொடர்ந்து ஆய்வுக்கருத்தாக எழுதுவார்கள். கொஞ்சம் கவனமாக வாசித்தால் சிரிக்கலாம்.

இங்கே பாருங்கள். LTTE with political frustration or Desperate LTTE என்ற மாதிரியான ஒரு கருத்தை மையமாக வைத்து இவர்கள் செய்யும் கூத்தை.

இந்து சனிகிழமை வெளியிட்ட political frustration ஆசிரியர் கருத்தை daily news திங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

The Hindu: Saturday, Dec 01, 2007
Opinion - Editorials: LTTE supremo’s plaint
It is an extraordinary confession of political frustration. The 2,700-word speech is a litany of grievances against everyone under the sun — except the talented military leader who has brought such cruelty, suffering, and uncer tainty to his own people and of course their compatriots belonging to other ethnic communities in the island.


Daily News: Monday, 3 December 2007
Prabhakaran’s speech confession of frustration - The Hindu


இந்து தொடர்ந்து அங்கவீனமான பெண்ணை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல முயன்றதாகச் சொல்லியிருக்கின்றது. பத்தொன்பது அப்பாவிப்பொதுமக்களை நுகேகொடவிலே குண்டு வெடிப்பிலே கொன்றதாகவும் சொல்லியிருக்கிறது. இப்படியான பயங்கரவாதிகளை உலகம் எப்படி ஆதரிக்கும் என்று கேட்டிருக்கிறது. இதே இந்து ஸ்ரீலங்கா அரசினால் வடக்கு கிழக்கிலே வான்குண்டுகளாலேயும் கண்ணிவெடிகளாலும் கடத்தப்பட்டும் கொல்லப்படும் பாடசாலை சிறுமிகளையோ அப்பாவி பொதுமக்களையோ எண்ணி ஸ்ரீலங்கா அரசினைக் கண்டித்து ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. உலகமும் அப்படியாகத் தெரிவிப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீலங்கா அரசுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் வடக்குகிழக்கு மக்களை கொல்ல ஆயுதங்களை கொடுக்கிறார்கள். அந்த ஆயுதங்களாலே வடக்குகிழக்கு மக்கள் சாகும்போது அதைக் கண்டிப்பதில்லை. அப்படியானால் விடுதலைப்புலிகளின் தலைவர் இந்து போன்றவர்களின் ஆதிக்கம் உள்ள உலகை பார்த்து பாலுக்கும் காவல் என்று பொய் சொல்லும் கண்மூடி உத்திராஜ பூனைகளா நீங்கள் என்று கேட்பது என்ன தவறு?

கடந்த காலத்திலே political frustration & desperate LTTE என்ற விதத்திலே இந்து இந்தா அழிந்தது எல்டிடீஈ என்று எழுதிய கட்டுரைகள் ஸ்ரீலங்கா அரசு, இராணுவ செய்திகள் போலத்தான் ஒலிக்கிறன. 1999 ஒக்ரோபரிலே Desparate LTTE's Political Frustration and the verge of extinction என்ற wistful thinking உடன் புரொண்ட் லைனிலே வந்த ஜெயராஜின் கட்டுரையின் ஒரு பந்தியையும் 2007 டிசம்பரிலே இந்துவிலே வந்திருக்கும் ஆசிரியர் கருத்தையும் பார்க்கிறவர்களுக்கு இந்துவும் அதன் ஆசிரியருமேதான் Political Frustration லே இருக்கின்றனரா என்று கேட்கத் தோன்றுகிறது.

1.
Frontline: Volume 16 - Issue 20, Sep. 25 - Oct. 08, 1999
A plea to the LTTE
Hon D. B. S. Jeyaraj


The LTTE finds that in spite of years of fighting and innumerable losses, it is nowhere in sight of its political objective. What is more, it finds itself increasingly alienated from international opinion. The territory controlled by it in Sri Lanka has shrunk considerably. Although by no means a spent force, the LTTE is certain that the process of decline has begun. Furthermore, there is a possibility that the devolution package may be implemented bypassing the Tigers. Under these circumstances, the r esulting political frustration seeks to target perceived scapegoats for this state of affairs. The tradition in Tamil politics has been to blame forces or individuals among the community or the internal enemy as the source of all troubles. Therefore, the LTTE has apparently turned its wrath on Tamils who are a hindrance to their goal. After all, Prabakaran had his baptism of fire by gunning down former Jaffna Mayor Alfred Duraiappah on July 27, 1975. Tamil killings have continued for nearly two decades.


2.
The Hindu: Saturday, Dec 01, 2007
Opinion - Editorials: LTTE supremo’s plaint
It is an extraordinary confession of political frustration. The 2,700-word speech is a litany of grievances against everyone under the sun — except the talented military leader who has brought such cruelty, suffering, and uncer tainty to his own people and of course their compatriots belonging to other ethnic communities in the island.


இதையும் விட frustation லே இந்து அனுராதபுரம் விமானபடைநிலையம் தாக்குதலை பற்றி எழுதிய ஆசிரியர் தலையங்கத்தைப் பாருங்கள். பலவீனமாக நிலையிலேயிருந்த சீன கம்யூனிஸ்டுகளின் கடந்த காலபோராட்டத்தையும் இஸ்ரேலிய இராணுவ ராங்கிகளுக்கு கல்லெறியும் பாலஸ்தீன இண்டிபாட்டாவையும் எதிர்காலப்புரட்சி போல புகழ்ந்து பேசிய ஒரு பத்திரிகை ஸ்ரீலங்கா அரசின் இராணுவத்துக்கு யுத்ததளவாடமாகவும் பொருட்செலவாகவும் பெரும் சேதம் தந்த இந்த தாக்குதலை desparate attempt என்று எழுதுவது எதற்கு?

3.
The Hindu: Wednesday, Oct 24, 2007
LTTE attack in military context

Pushed into the Vanni jungles and denied vital supplies as a result of a relentless year-long campaign by the Sri Lankan military, a desperate LTTE has scored a hit of modest military significance. The October 22 pre-dawn ground-and-air attack on the Anuradhapura air base in the North Central Province, leaving four military helicopters destroyed and 14 soldiers dead, was in reality a suicide operation by an organisation on the run. The modus operandi is typical of the LTTE.



அழிவின் விளிம்பிலே நிற்பதாக புரொண்ட்லைன் அறிவிப்பு விட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னாலேயும் அனுராதபுரத்தையும் நுகேகொடவையும் அந்த இயக்கம் தாக்குவதாக குற்றம் சாட்டி ஆசிரியர் தலையங்கம் இந்து எழுத வேண்டி இருப்பதுதான் அழிந்ததன் அறிகுறியா? அல்லது அழிந்துகொண்டிருப்பதன் அறிகுறியா?

இந்து போன்றவர்கள் பிரதிநிதிப்படுத்தும் ஊடக, அரசியல், இராணுவ வலியோர் உலகத்தின் ஒரு பக்கச்சார்பினை விடுதலைப்புலிகளின் தலைவர் சுட்டிக் காட்டுவது விடுதலைப்புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்று ஆகிவிடுமா? அப்பாவிப்பாடசாலைச்சிறுமிகளைக் குண்டுகளாலே கொல்லும் ஸ்ரீலங்கா அரசினைக் கண்டிக்காது அப்படியான கொலைகளை மறைத்து ஸ்ரீலங்கா அரசுக்கு சார்பாக எழுதும் இந்து ஆசிரியர் போன்ற இரத்தகறை படிந்த பேனாபத்திரிகையாளயும் அப்பாவிகளை கொல்வதற்கு இராணுவ உதவி வழங்கும் அரசுகளும் இருக்கும்வரையிலே விடுதலைபுலிகள் மக்கள் இடையே எப்படி பலவீனம் அடைய முடியும்? இந்து போன்ற வல்லரசியல் ஆட்கள் பக்கம் சாராமல் எல்லா பயங்கரவாதத்தையும் கண்டிக்காத வரைக்கும் தமது விருப்பத்தை தமிழர் விருப்பமாக திணிக்காதவரைக்கும் அவர்கள் சொல்லும் பயங்கரவாதம் பலவீனம் அடைய வாய்ப்பில்லை.

ஸ்ரீலங்கா அரசு பயமுறுத்தி கொல்லும் இலங்கை பத்திரிகையாளர்கள், உடைத்து எரிக்கும் இலங்கை ஊடகங்கள் இவர்களின் உரிமைக்கும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஆதரவாக இந்து ஆசிரியர் ஆரியத்தலையங்கம் எழுதும்வரைக்கும் அவரைப் போன்றவர்களின் கைகளிலும் பத்திரிகைகளிலும் இரத்தக்கறை படிந்தே இருக்கும். அவர்களும் அரசின் பயங்கரவாதத்துக்கு உதவும் பயங்கரவாதிகளே. அரசின் நலனோடு தமது நலனைச் சேர்த்து கொண்டு இயங்கும் பாசிசிட்டுகளின் குரல்களே. இவர்களை போன்றவர்கள் சொந்த பத்திரிகை சகோதரர்கள் துன்பத்திலே மாளுவது கண்டும் காணாததுபோல பத்திரிகை சகோதரர்களை அடக்கும் அரசுக்கு ஆதரவாக ஆசிரியர் கருத்து எழுதுகிறபர்கள். அப்படியான அரசிடம் தமது சேவைக்காக விருது வாங்கும் மறைமுகமான எழுத்துப்பயங்கரவாதிகள் இவர்கள். இவர்களுக்கு இப்படியாக political frustrationலே desparateடாக எட்டு ஆண்டுகளாக ஒரே மாதிரியான குரலிலே negativeவாக எழுத மட்டுமே முடியும். தமது சொந்தப்பத்திரிகையை ஆட்சி முடக்கிவிடுமோ என்ற பயத்திலேயே பெங்களூர் ஓடி போய் இருந்து கருத்துசுதந்திரம் பற்றி பேசிய பத்திரிகையாளர்களைக் கொண்ட பத்திரிகைக்கு உயிர் போகவும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் பத்திரிகையாளர் உடைத்து கொளுத்தபடும் அலுவலங்களிலே வேலை செய்வதற்காக வருந்தி ஸ்ரீலங்கா அரசைக் கண்டித்து எழுத முடிவதில்லை. ஆனால் அந்த அரசின் சார்பாக இந்தியாவிலே கருத்து சொல்ல எழுத முடிவதற்கான காரணம் என்ன? அப்படியான பத்திரிகையின் அதன் ஆசிரியரின் நம்பகத்தன்மை என்ன? பத்திரிகைதர்மம் என்ன? இவர்களும் மறைமுகமான பயங்கரவாதிகள் இல்லையா? இப்பத்திரிகையின் இச்செயலை தெரிந்து கொண்டு ஆதரிக்கிறவர்களும் பயங்கரவாதிகள் இல்லையா?

Is Mr. Lanka RATna in political frostirritation? Or, is he once again suffering from one of his severe bouts of two-decade old egoistic eczema?

Labels: , , ,


Comments:
Sri Lanka: AP prostitute RAVI NESSMAN Busted
http://www.sibernews.com/news/sri-lanka/-2007120310703/
 
இலங்கை ஆமி நியூசையும் ஹிந்து நியூசையும் பாருங்க. வேறெங்கேயும் இது வரல்ல. அத அள்ளி அப்புடியே அச்சுல போட்டாப்பல இது. என்னத்த சொல்லி?


ஸ்ரீலங்கா ஆமி நியூஸ்
http://www.defence.lk/new.asp?fname=20071202_04

Last modified on: 12/3/2007 10:38:39 AM Two LTTE cadres killed, one committed suicide - Jaffna
The media center for national security (MCNS) says that 02 more LTTE cadres were killed while another committed suicide in Jaffna today (02 December).

According to the MCNS, troops confronted with a group of LTTE cadres who attempted to infiltrate security forces' defence at Muhamalai around 3.30 this evening.

Troops having crushed the terror infiltration bid advanced to the LTTE defence and destroyed two bunkers. Two LTTE cadres were killed in this incident. No casualties reported to own troops, MCNS added.

Separately, another LTTE suicide bomber was killed himself at a civilian house at Vadiri, Jaffna around 1.00 p.m today. The incident was occurred while the security forces were conducting cordon and search in the area. Troops had laid the cordon because of information given by a civilian on terrorists' presence in the area.

Later, the suicide cadre has been identified as Darani, a 19 year old male of Thumpalai, Point Pedro.

Also, troops had found another unexploded suicide belt and a hand grenade in the possession of the suicide cadre.

Investigations are in progress.


கிந்து நியூஸ்
http://www.hindu.com/thehindu/holnus/001200712031210.htm
Monday, December 3, 2007 : 1200 Hrs
Top Stories
Two Tigers killed in Lanka, suicide bomber blows himself up

Colombo (PTI): A suspected LTTE suicide bomber blew himself up when troops surrounded him in Sri Lanka's northern Jaffna peninsula, where two Tamil Tiger rebels and a soldier were killed in separate incidents, the Army said here today.

The LTTE rebels were killed when they tried to breach the security forces' defence line at Muhamalai in Jaffna on Sunday evening, the media centre for national security said.

Army personnel also destroyed two rebel bunkers, it said adding, no casualties were reported among the troops.

A suspected LTTE suicide bomber killed himself at a civilian house at Vadiri, Jaffna on Sunday after the security forces laid a cordon in the area.

The troops, acting on information provided by a civilian about presence of rebels, had rushed there and cordoned off the area, the Army said.

The LTTE cadre has been identified as Darani, a 19-year-old youth from Thumpalai, Point Pedro. Troops have recovered another unexploded suicide belt and a hand-grenade from the possession of the deceased.

In a separate incident in Jaffna, a soldier lost his life in the explosion of a Claymore mine suspected to be planted by LTTE rebels to target a group of Sri Lankan troops.

In eastern Batticaloa, a former Tamil Tiger rebel, identified as Thambimuththu Nadaraja, was hacked to death by suspected LTTE men on Sunday morning, the Army said.
 
What are you trying to prove?
You know him. Now the question is, my friend, how to bend him like burnt plastic
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?