Thursday, November 20, 2008
DEBBIE DOES DALLAS!
முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம்.
இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப்பீர்கள்.
இது ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலின் எச்சம். லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா (Sarath Fonseka) தப்பித்தது தற்செயல். கண்டிப்பாக உயிர் போய்விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அப்படியொரு நிலைமையில்தான் அவரை ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஏனென்றால், தாக்குதல் நடந்த இடத்தில், அந்தக் கணமே எட்டு ராணுவ அதிகாரிகள் பலியாகிவிட்டார்கள். இருபத்தேழு பேர் பாதி உயிருடன் கிடந்தார்கள். யாரும் பிழைக்கக்கூடும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை.
தப்பித்தது தற்செயல். அதுவும் ஃபொன்சேகா. அவரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்தான் அது. 2006 ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, செவ்வாய்க்கிழமை. அன்றைக்குத் தொலைக்காட்சியில் என்னவோ முக்கிய உரை ஆற்றப்போவதாக அதிபர் ராஜபக்ஷே சொல்லியிருந்தார். என்னவாக இருக்கும்? போர் நிறுத்தம் அமலில் இருந்த சமயம். நார்வே தூதுக்குழுவினர் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையே நடைபோட்டுக்கொண்டிருந்தார்கள். எங்காவது, ஏதாவது ஒரு புள்ளியில் சமரசத்துக்கான இழையைப் பிடித்துவிடும் நோக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள். முன் அனுபவம் உண்டு. விடாக்கண்டர் யாசிர் அராஃபத்தையும் கொடாக்கண்டர் இட்ஸாக் ராபினையுமே இழுத்துப் பிடித்து உட்கார வைத்து முன்னதாக ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு வழி வகுத்தவர்கள். பாலஸ்தீன் விஷயத்தில் சாதிக்க முடிந்ததை இலங்கை விஷயத்திலும் சாதித்துக் காட்டிவிட்டால் உலகம் தொப்பியைக் கழற்றி வணக்கம் சொல்லும்.
சண்டை போடுவதைக் காட்டிலும் சிரமமானது, சமாதானம் செய்வது. பேச்சு ஒன்றுதான் ஆயுதம். வக்கணை அவசியம். வாய்ஜாலம் இன்றியமையாதது. எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம், அடித்துக்கொள்ளும் இரு தரப்புக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவது. அதற்கு உள்ளார்ந்த அக்கறையும் ஈடுபாடும் தேவை.
நார்வே அதைத்தான் செய்துகொண்டிருந்தது.
2002-ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 2004 ஜூலைக்குப் பிறகு நார்வே சமாதானக் குழுவின் நடவடிக்கைகள் சூடு பிடிக்க, இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை. இதுதான். இது மட்டும்தான். போதாதா?
கொழும்புவில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் அன்றைக்கு வழக்கம்போல் காலை வந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஃபொன்சேகா. ஒரு மணிக்கு அதிபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அநேகமாக மாலை ஆற்றவிருக்கும் தொலைக்காட்சி உரை தொடர்பாக ஏதோ பேசிவிட்டு சாப்பிடப் புறப்பட்டார்.
அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.
எனில் பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு, போர் நிறுத்தம், சமாதான உடன்படிக்கை?
அதெல்லாம் இல்லாமலா? அவசியம் இருக்கும். அதிலென்ன சந்தேகம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். புலிகள் கூடாது. பிரபாகரன் கூடாது. தனி ஈழம் கூடாது. தமிழர்களும் கூடாது.
இன்றைக்குப் புதுடெல்லியில் வந்து உட்கார்ந்துகொண்டு ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் தருகிறேன் என்று அவர் சொல்லிவிட்டுப் போனதை நல்லதொரு நகைச்சுவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தப்பித்தவறியும் சந்தேகப்பட்டுவிடக் கூடாத ஜீவாத்மா அவர். ஒன்றும் செய்வதற்கில்லை. வந்த வழி அப்படி. பார்த்துப் பயின்ற சரித்திரம் அப்படி.
அவசரமில்லை. அதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். இப்போது மதிய உணவுக்குப் புறப்பட்ட ஃபொன்சேகா.
கொழும்பு ராணுவத் தலைமையகம் என்பது மிகப்பெரிய வளாகம். கிட்டத்தட்ட ஒரு கிராமம் அளவுக்கு விரிந்து பரந்த பிராந்தியம். அருகிலேயே ராணுவ அமைச்சகம் இருக்கிறது. சற்றுத்தள்ளி கூட்டு ராணுவப் படையின் தலைமை மையம். ஒரு ராணுவ ஆஸ்பத்திரி. அதிகாரிகளுக்கும் ஜவான்களுக்குமான மெஸ். மிகப்பெரிய மைதானம்.
வெளியாள் யாரும் அத்தனை சுலபத்தில் அந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது. பலமான பாதுகாப்பு. பல அடுக்குப் பாதுகாப்பு. துப்புரவாக ஆள் அடையாளம் பார்த்து, விசாரிக்காமல் யாரையும் உள்ளே விடமாட்டார்கள்.
ஆனால் அன்றைக்குச் சற்று ஏமாந்தார்கள். ராணுவ ஆஸ்பத்திரியில் அன்றைக்கு கர்ப்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனை முகாம் என்று அறிவித்திருந்தார்கள். ராணுவ ஜவான்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவச செக்கப் செய்துகொள்ளலாம். கர்ப்பம் தரித்தவராக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
எனவே அந்தப் பெண், ஒரு கர்ப்பிணி வேஷம் எடுத்துக்கொண்டார். நிறைமாதம். நடக்கமுடியாத நடை. முகத்தில் களைப்பு. எண்ணெய் காணாத தலை.
காலை முதல் அம்மாதிரி பல கர்ப்பிணிகளை நிறுத்தி விசாரித்த செக்யூரிட்டி ஆட்கள், பசிவேளை வந்தபோது சற்றே அசந்துபோனார்கள். `யாரம்மா? எதற்கு வந்தாய்? செக்கப்பா? அதோ பார், அதுதான் ஆஸ்பத்திரி. வாசலில் சீட்டு எழுதி வாங்கிக்கொள். உள்ளே போய் வரிசையில் உட்கார்.'
அனுப்பிவிட்டார்கள். கேட்டிருக்கலாம். `நீ யாருடைய உறவுக்காரப் பெண்? அடையாள அட்டை எங்கே?'
அந்தப் பெண் தயாராகத்தான் வந்திருந்தாள். ஒரு போலி அடையாள அட்டை அவள் வசமிருந்தது. அதையும் மீறிப் பிரச்னை வந்தாலும் சமாளிப்பது ஒன்றும் சிரமமில்லை. உயிருக்குத் துணிந்துவிட்ட பிறகு கையகல அட்டை ஒரு விஷயமா?
சரியாக ஒன்றரைக்கு தளபதி சரத் ஃபொன்சேகா தன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.
எவர்சில்வர் நிற லிமோஸின் கார். முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு பைக்கில் நான்கு ஜவான்கள். ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள். வேறு வழியில்லை. சாப்பிடப் போகும்போதுகூட சண்டைக்குப் போகும் ஆயத்தங்களுடன்தான் கிளம்பியாகவேண்டும். சூழ்நிலை அப்படி. போர் நிறுத்தக் காலம் என்பது பூவுலகத்துக்கான அறிவிப்பு. தீவுலகத்தில் போர் நிறுத்தம் என்றால் அடுத்த போருக்கான ஆயத்தம் என்று பொருள்.
ஃபொன்சேகா தனது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரி வளாகத்தைக் கடக்கிற வினாடியைத்தான் அந்தப் பெண் உத்தேசித்திருந்தாள்.
பாய்ந்துவிட வேண்டும்.
தளபதியின் காருக்கு முன்னால் வரும் இரண்டு மோட்டார் சைக்கிள் வீரர்கள்தான் பிரச்னை. சமாளித்து குறுக்கே புகுந்துவிட்டால் விஷயம் முடிந்துவிடும். யாரும் எதிர்பார்த்திராத வேளை, எதிர்பார்க்கவே முடியாத இடம் என்பதால் வாய்ப்புகளின் சதவிகிதம் அதிகம்.
அவள் காத்திருந்தாள். கார் வந்தது. வேகம் குறையாத கார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் சாலையில் பாய்ந்தாள். ஒரு கணம் இருக்குமா? அதை விடக் குறைவான நேரம். ஃபொன்சேகாவின் காருக்கு இடப்புறம் முன்னே வந்த மோட்டார் சைக்கிள் ஜவானுக்கு ஏதோ அசம்பாவிதம் என்று உள்ளுணர்வு சொன்னது. அதே கணம்தான். வண்டி ஓட்டிக்கொண்டிருந்த வேகத்திலேயே, குறுக்கே பாய்ந்து வரும் அந்தப் பெண்ணை நோக்கித் தன் இடது காலைத் தூக்கி உதைத்தார்.
அவள் வெடித்தாள். அது வெடித்தது.
இன்னும் ஓரடி அந்தப் பெண் முன்னால் வந்திருப்பாளேயானால் ஃபொன்சேகா தப்பித்திருக்க முடியாது. தூக்கி எறியப்பட்ட காரின் முன் சீட்டில் இருந்த மெய்க்காப்பாளர் இறந்தார்.
உடன் வந்த ஜவான்கள் இறந்து போனார்கள். அருகே இருந்த மேலும் சிலரும். ரத்த வெள்ளத்தில் பலரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஃபொன்சேகாவையும்.
பலத்த அடி. விவரிக்க முடியாத கோரம். ஏராளமான ரத்த சேதம். மார்பிலிருந்து அடி வயிறு வரையிலான பகுதிகள் பலத்த சேதமுற்றிருந்தன. எனவே, நிறைய ஆபரேஷன்கள் தேவைப்பட்டன. தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்கே (Hector Weerasinghe), சினிமா டாக்டர்கள் மாதிரி, `எதையும் இப்ப சொல்லமுடியாது' என்றுதான் முதலில் சொன்னார்.
ஆனால், பத்து டாக்டர்கள் அடங்கிய குழுவின் தீவிர சிகிச்சையின் பலனாக ஃபொன்சேகா பிழைத்துக்கொண்டார்.
ராஜபக்ஷேவின் அன்றைய தொலைக்காட்சி உரையில் வேறெது குறித்தும் அவர் பேசவில்லை. இதுதான். இது ஒன்றுதான். கண் துடைப்புப் போர் நிறுத்தம் பற்றிய எரிச்சல் கலந்த ஏமாற்றம். `இனி நான் சும்மா இருக்க மாட்டேன்' என்கிற எச்சரிக்கை. அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற சில புள்ளிவிவரங்களையும் சொன்னார்.
யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மக்களும் ராணுவத்தினரும் மிரண்டிருந்தார்கள். ராணுவத் தலைமையகத்துக்கு உள்ளேயே, ராணுவத் தளபதி மீது ஒரு தாக்குதல். எப்படி இது சாத்தியம்?
மருத்துவமனையில் கண்மூடிப் படுத்திருந்த ஃபொன்சேகாவும் அமைதியாக இதனைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார். `எப்படி சாத்தியம்? எப்படியோ சாத்தியமாகியிருக்கிறது. எப்படியோ நான் பிழைத்திருக்கிறேன். இனி நான் எழவேண்டும். பூரண குணமடைய வேண்டும். உடற்பயிற்சிகள் செய்து பழைய நிலைக்குத் திரும்பவேண்டும். நடக்க முடியவேண்டும். ஓடமுடியவேண்டும். பாய முடியவேண்டும். மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியவேண்டும்.
எல்லாம் முடிந்தால், அடுத்து நான் முடிக்கவேண்டியது விடுதலைப் புலிகளை. இதுதான். இது ஒன்றுதான் இனி இலக்கு. விடமாட்டேன். இனி ஏழேழு ஜென்மத்துக்கும் போர் நிறுத்தம் என்பது இல்லை. விடுதலைப் புலி இயக்கத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை ஓயமாட்டேன். என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட்?'
ராஜபக்ஷே சொல்ல ஒன்றுமில்லை. எப்போது அவரும் ஃபொன்சேகாவும் வேறு வேறு மாதிரி சிந்தித்திருக்கிறார்கள்?
அன்றைக்கு மருத்துவமனைக்குச் சென்று உயிர் மீட்டுத் திரும்பி, பணியில் சேர்ந்த நாள் ஃபொன்சேகா ஆரம்பித்த யுத்தம்தான் இன்றைக்குக் கிளிநொச்சியில் வந்து நிற்கிறது. என்ன ஆனாலும் போர் நிறுத்தம் கிடையாது என்று அவரைச் சொல்ல வைக்கிறது. இது இறுதி யுத்தம் என்று அதிபரைப் பேசவைக்கிறது. பேசத் தயார் என்று புலிகள் கூப்பிட்டாலும் `மாட்டேன், போ' என்று முறைத்துக்கொண்டு நிற்க வைக்கிறது.
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் யுத்தம்தான். ஆனாலும் இந்தத் தனிமனிதப் பழி உணர்வுக்கு இங்கே ஒரு முக்கிய இடம் இருக்கிறது!
============================
A SIMPLE QUESTION.
can't this fiction writer take history a little more serious?
You beat P. K. Balachchandran ,sir

Labels: crack coccaine, faction friction fuckson fiction, IS HIS SHIT HIT, pan parag
Comments:
<< வீடு
லூஸ்ல வுடு சார். நெலத்துல கால் படாமா ஹீரோ ரீலுக்கு ரீல் சின்ன சுனாமியா சுத்தி ஒதைச்சா உய் தலீவா உய் உய்னு விசிலு அட்சு பயகிப் போச்சா இந்தா மாரி ரீல் உட்டு எயுதினாதான் நம்புவோமாக்கும். ரைட்டர் சாருதான் ராசபக்ச அண்ணாத்தைக்கு அடைப்பகாரனா கீராரூன்னா பாத்துகேயேன். அவ்ளோ க்ளோசப்ல குந்தின்னு டயலாக்கு கேட்ருக்காரு. எயூதுராரு. ஒனக்கேன் ப்ரதர் காதுள்ளார பொகை போவுது. உட்டு தள்ளு தமாசா வாசி வாய் வுட்டு சிரிச்சா நோய் வுட்டு போய்டுமாமே. இடுக் கன் வருங்காலும் ஹிகுக
அட நீங்களும் இந்த வார குமுதம் ரிப்போட்டர் பாத்தாச்சா?
வேர்பல் டயர்ரியா. மூக்கை பொத்திக்கிட்டு ஒதுங்கி நடையை கட்டுங்க.

/அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்./
இது சிவகாசி பட்டாசா? தென்காசி கத்திவீச்சா? ராஜபக் ஷ, பொன்சேகா ரெண்டு பேருமே இதை வாசிச்சா அட நமக்குள்ளே இத்தனை அன்பான்னு உருகி கட்டிப்புடிச்சி கண்ணீர் உகுத்துடுவானுக. கரடி உடுறதுக்கும் அளவு இருக்குப்பா ராகவா

பாரா அவர்கள் ரிப்போர்டரில் எழுதிய கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்யத் தெரிகிறது. ஆனால் இங்கிருந்து சுட்டது என்று கூறும் நேர்மை இல்லையே உம்மிடம்? நீரெல்லாம் என்ன பதிவு போட்டு, .. என்னமோ போங்க.
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன்
This guy is unbelievable. Crap over crap.
First he claimed, the war started only because Fonseka got blasted. Do not forget Rajapakse & Fonseka are drinking buddies from their school days.
Now claims, LTTE asked few Scandinavian countries to detach themselves from European Union. What the hell he thinks when he writes. He has the audacity to dump this pile height of crap when people observe the events very carefully.

Respectable Dondu Sir thank you for pointing out my mistake. I did not know this article appeared on Kumudam Reporter by Mr. Para. This was sent to me by one of my friends via e-mail. The comment found under the post is also his one. Once again thank you very much for letting me know the source and the author's name. If you know more about the author, please let me know. He has to be appreciated for writing this series in an Indian journal in a time people are very scared to talk about Sri Lankan tamils. I strongly understand only for keeping him safe he tries to balance some facts on both sides like the reason for the war started again, who started the war and how LTTE pushed Denmark and Sweden to stay away from EU. If he writes the facts as they are his life might be in danger when people in Tamilnadu are really angry with LTTE for starting war with Sri Lankan government to put Tamil people's lives in peril. After I saw the Chennai Law college incident and how the LTTE supporters in kovai burnt the Hindu paper copies, I can understand why Mr. Para is scared write the truth as it would look very supportive to the terrorist outfit. Mr. para should be very knowledgebale eelam tamil journalist. He seems to know a lot about what happens there. My grandfather (Lord bless his soul) had an informative journalist friend, Mr. Pararajasingham, who I heard moved to Tamilnadu after 83 july riots. I wonder if Mr. Para is the same Mr. Pararajasingham, my grandpa's friend.
ஜூலியன் நீரு இவ்ளோ அப்பாவியா அப்பாவிபோல ஆக்ட் குடுக்றீரா
எதுவாச்சியும் டோண்டு சொல்ற பாரா பேரு பாராரஜசிங்கமில்லே. பா. ராகவன் என்கிற பல்ப் ஆசாமி. இந்தாளு ஹாப் பாயில்ட் ஆம்லேட் போடதுல சூப்பர் குக்கு. அவரோட டாலர்தேசம், காஷ்மீர்தேசம், பாலஸ்தீனதேசம் பல்ப் சீரிசுல இப்போ லங்காதேசமுன்னு வெச்சுக்குங்க. இப்போ தமிழ்நாட்டுல ஈழதமிழர் காத்து கொஞ்சம் அடிக்குதா சாரு பூந்து வெளையாடறாரு. அவருக்கு பல்புதான் முக்கியம். அவரோட பாணிக்கு சிம்பளா பரபரபேத்தரதா நெனைச்சுகிட்டு பினாத்துராரு. வந்தா துட்டு போனாலும் துட்டு. என்ன பண்ணரது? பத்திட்டு எரியுற பெருமா கோவிலுல தீபாராத்தின்னு சேவிச்சு புண்ணியம் தேடர ஆசாமிங்க இவுங்க. ஈழம் பத்தி எழுத விரூம்பற ஆளு என்னிக்கோ எழூதிருக்கலாமே. எதுக்கு இன்னிக்கு வரைக்கும் இருந்தாரு. கொடுமை சாமி. எவராச்சும் ஈழபதிவர் இவரோட சீரியலுக்கும் எதிர்சீரியல் இவரு பண்ணற பண்ணப்போற வரலாற்று அழிச்சாட்டியாங்களை பதிவு பண்ணனா தேவல. புனைவு வெச்சு வரலாத்து கத எழுதின சாண்டியல்யன், கல்கிக்குகூட ஒரு சென்ஸ் ஆப் ஹிஸ்டரி இருந்துச்சு. இந்தாளுக்கு நான்சென்ச் ஆப் ஹிஸ்டரிகூட இல்லே.
டோண்டு சார பத்தி பெரிசா அலட்டிக்காதீங்க. அவருக்கு பாரா மேலேகூட பெர்சா அக்கற இல்லே. நீங்க போட்ட பெர்ய ஜாதிமான் பதிவு பின்னூட்டத்துல சில பேரு இவரை ஜாடமாடையா ஏதோ பின்னிட்டாங்க. அதுல ஒங்களுல கடுப்பாயிட்டாருன்னு நெனைக்கிறேன்.

/ அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற சில புள்ளிவிவரங்களையும் சொன்னார்./
P. Ragavan should write the facts as they are. He cannot mix fiction and facts like grinding one bucket of dosa dough. There is a limit for imagination. He does not know what the suicide bomber thought, what Sri Lankan President and Army chief thought and think. He cannot and have no right to extrapolate when he writes history based on facts.
Further, he has to do his research better. He has to look what happened between Feb 22, 2006 peace talk in Geneva and April 25 2006 bomb blast. As a matter of fact, Tamil National Allience's imporatant member Vigneswaran was killed within this time range. He can easily get the facts and chronology by browsing pro-eelam Tamilnet site and pro-Sri Lankan government The Hindu and Frontline sites. Anyone who follows the Sri Lankan-Eelam ethnic problem will find Ragavan's writing shallow, bombastic, irresponsible and offensive.
I can guess what Ragavan will do in the coming weeks. After hearing some murmurs like this one, he will jump on the other side, and will curse Sri Lankan side a little only to get the complaints go down. Then he will be on track on his government's side. I wonder why he has not started from the beginning. The issues in that Island got started when it was called Ceylon, not on April 25, 2006. Also, I wonder whether he will write anything about the participations and manipulations of his own governments in changing the course of the issue.
This is the high time any individual from Tamilnadu, who really concern the welfare of eelam tamils take people like P. Ragavan to court for journalistic dishonesty.
This is also the right time people put their blog power in action. Anyone, who disagrees with P. Ragavan's his story send a mail to kumudam pointing out his misinformation and paparazzi style of writing in the expense of facts. Do not put a 'Do not Read' icon in your blog. It will only increase more people read his story.
If kumudam really cares about factual writing, it should have a researcher to double check the facts. Also, it should properly do the editor's job. While understanding the business of kumudam in stake, kumudam should also understand a dying ethnic community's history should not be trashed in the name of pulp fiction.

கட்டுரை எழுதப்ப்பட்ட விதம் குறித்து சில பின்னூட்டங்களின் கருத்தோடு ஒப்புதல் உண்டு என்பதைத் தவிர, பாராவின் தொடர்கட்டுரை பற்றி இங்கே சொல்ல எனக்கு ஏதுமில்லை. எதிர்பார்த்ததுபோலவே இத்தால் வரலாறு படைத்திருக்கின்றார் என்பதோடு இங்கே நிறுத்திக்கொள்கிறேன். வேண்டுமானால், பிறகு ஒரு பதிவு இட்டுக்கொள்ளலாம்.
ஆனால், சட்டத்தின் முன்னே கொண்டு போகவேண்டுமென்று யாழ்க்குமரன் பேசுவதெல்லாம் கொஞ்சம் அதிகம். திரித்து எழுதும் பத்திரிகையாளரையெல்லாம் சட்டத்தின் முன்னாலே கொண்டு போகவேண்டுமென்றால், இரண்டாவதாக ஓர் தீர்க்கமான சட்டம் கேட்கக்கூடிய காரணமிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கும் மேலே, மிகவும் முக்கியமாக, இப்போதுதான் ஈழம் தொடர்பாக ஈடுபாடு கொண்டு வாசித்து தன் கணக்கிலே ஒன்று கூடுவதற்காக மட்டும் இக்கட்டுரை எழுதுவதற்காக, பாராவைச் சட்டத்தின் முன் இழுக்கவேண்டுமென்கிறவர்கள், இதைவிட மிகமோசமாக, ஈழத்தமிழர்கள் மீது காழ்ப்புடனேயே திட்டமிட்டே திரித்துப் பல்லாண்டு காலமாக எழுதும் இந்து, துக்ளக் ஆசிரியர்களும் அவர்களின் பத்திரிகையாளர்களும் முதலில் சட்டக்கூண்டிலே ஏற வைக்க வழியைப் பார்த்திருக்கவேண்டும். வரலாற்றுக்கூண்டினிலே அவர்கள் ஏறித்தான் ஆவார்கள் என்பது ஒரு பக்கம் கிடக்கட்டும்.
பாராவின் வரலாற்றுத்தொடர்படைப்பின் மீது தவறு காண்பவர்கள் எதற்காக, ஒரு தனிப்பதிவினைத் தொடங்கி ஒவ்வோர் அத்தியாயத்தினையும் குமுதம் ரிப்போட்டர் போடும் போது, (பதிப்புரிமையை மீறாது முழுக்கட்டுரையை எடுத்துப்போடாது) அதன் மீதான தவறுகளைமட்டும் தகுந்த முறையிலே ஆதாரங்களுடன் எடுத்து மறுக்கக்கூடாது? வேண்டுமானால், அதற்காக ஒரு பதிவினைத் தொடங்குகிறேன். பின்னூட்டங்களிலே ஆதாரங்களுடன் தவறுகளை எடுத்துக்காட்டலாமே? குதம் ரிப்போட்டார்களும் பாராவும் அடுத்தடுத்த இதழ்களிலே திருத்திக்கொள்ளவும் வசதியாகவிருக்கும். பாராவின் கட்டுரை போலில்லாமல் ("முப்பத்தைந்து இராணுவ அதிகாரிகளும் நூற்று நாப்பத்திரெண்டு அப்பாவிகளும் மூன்று தாடி முளைத்த ஆட்டுக்குட்டிகளும் வேட்டையாடப்பட்டுக் கொத்துக்கறி போடப்பட்டார்கள்" என்ற சலவாத்துக்கு) வரலாற்றிலே ஓர் குறிப்பைப் பிற்குறிப்பு ஆதாரமாகக் கொடுத்து எழுதலாமே?
அதைவிட்டுவிட்டு, பாராவின் கட்டுரையைப் பிழை பிடிப்பதிலே மட்டும் நக்கீரராகவிருப்பதிலோயோ சரிவராத சட்டத்து இழுப்போமென்று அறைகூவுவதிலும் ஏதுமே விளையப்போவதில்லை.

வந்துட்டாருயா வாய்தா வக்கீல் வரதராஜன். இவருதான் கனம் கோட்டார் அவர்களேன்னு முழநீளத்துக்கு முழக்கிப் பேசபோறாரு. போய்யா புண்ணாக்கு. நீயி பாராக்கு காஜா பையன்னா ஒத்திக்க. பாரா எடத்துல வேறாளு இருந்தா காண்டுல நோண்டிருப்பே. ஒன்னை தெரியாதா எங்களுக்கு? போடா டுபுக்கு அந்தாண்ட
TAMIL SASI's post related to this one
http://blog.tamilsasi.com/2008/11/kumudam-reporter-eelam-history.html
well said

அன்புள்ள ரமணி,
ஏற்கெனவே முந்தைய தொடர்களின்போது நான் பலசமயம் சொல்லியிருக்கிறேன். எழுதப்படும் ஒவ்வொரு வரிக்குமான ஆதாரங்களைக் கூடவே அளிப்பதென்பது வார இதழ்களில் சாத்தியமில்லை, இடம் கிடையாது அங்கே. தவிரவும் அது வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தும். தொடர் நிறைவடையும்போது ஆதாரங்களை எப்போதும் நான் மொத்தமாக வழங்குவது வழக்கம். இம்முறையும் அப்படியேதான் செய்யவிருக்கிறேன். இருப்பினும் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் ஒரு வரிக்கான [//("முப்பத்தைந்து இராணுவ அதிகாரிகளும் நூற்று நாப்பத்திரெண்டு அப்பாவிகளும் மூன்று தாடி முளைத்த ஆட்டுக்குட்டிகளும் வேட்டையாடப்பட்டுக் கொத்துக்கறி போடப்பட்டார்கள்" என்ற சலவாத்துக்கு) வரலாற்றிலே ஓர் குறிப்பைப் பிற்குறிப்பு ஆதாரமாகக் கொடுத்து எழுதலாமே?//] எனது ஆதாரம் இது:
http://www.dailymirror.lk/2006/04/26/front/04.htm
ஒரு சிறு பின்குறிப்பு. உங்களுடைய, மற்றபிற நண்பர்களுடைய அனைத்து விமரிசனங்களையும் நான் முழுமையாக மதிக்கிறேன், என் தரப்பில் பிழை ஏற்படுமானால் திருத்திக்கொள்வேன். ஆனால் ஒவ்வொரு வரியின் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பது என்பது இயலாத காரியம். இது என் வேலையைக் கெடுக்கும். மொத்தமாக இறுதியில் இச்செயலைச் செய்வேன். புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்
பாரா/

பாரா,
இங்கே என் பின்னூட்டம் தொடர்பான உங்கள் மின்னஞ்சலுக்கும் இங்கேயான உங்கள் பின்னூட்டத்துக்கும் இணைப்புக்கும் நன்றி. என் பதிவிலே விரித்து இவ்வாரத்திலே எழுதுகிறேன் நன்றி.
Post a Comment