Sunday, January 04, 2009
குப்புறக் கிடந்து கும்பி நோகச் சிரிக்க வைக்காதீர்கள்
Like the contents of the previous mail this one also, I got from the same friend in e-mail.
For the first reading it sounded funny and weird. Then I realised how pathetic is the reality.
குப்புறக் கிடந்து குண்டி நோகச் சிரிக்க வைக்காதீர்கள்
நகைச்சுவைக்கும் எல்லையுண்டு. இலங்கைக்கு மேலாக விமானத்திலே பறந்த எவருமே இலங்கை அரசியல் ஆய்வாளர் ஆகலாமென்ற நிலை. இரண்டு மாதங்களுக்கு முன்னாலே புவியியல் வரைபடத்திலே இலங்கையை காட்டமுடியாதவர்களே இன்று இலங்கை பற்றி இதிகாசமும் புராணமும் எழுதலாம் எனும் போது, இலங்கைமேலே விமானத்திலே பறந்தவர்களை அரசியல் ஆய்வு விற்பனர்கள் என்பதிலே ஏதும் தவறில்லை. Google Scholar Search இலே போய், இலங்கை இனப்பிரச்சனை பற்றித் தேடிப்பாருங்கள். இனப்பிரச்சனைக்குள்ளே அகப்பட்டு, உடலளவிலோ, உள்ளத்தளவிலோ, இரண்டு வகைகளிலுமோ பாதிக்கப்பட்ட உங்களுக்கே தெரியாத உங்களையும் உங்கள் சூழலையும் பற்றிய தகவல்களை ஆய்வுவிற்பனர்கள் தருகின்றார்கள்.
ஈழத்தமிழ்ப்பெண்கள் சீதனக்கொடுமையாலும் பாலியல்வன்புணர்வினாலே தங்களைச் சுத்திகரித்துக் கொள்வதற்காகவுமே விடுதலை இயக்கங்களிலே சேர வலுக்கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்ற சகவிற்பனர்கள் மேற்பார்வையிட்டு அங்கீகரித்த ஆய்விதழ்க்கட்டுரைகளையும் (மூதேவி, அது peer reviewed journal articles டா) புத்தக அத்தியாயங்களையும் நீங்கள் படிக்கமுடியும். இவற்றிலும் பெண்ணியம், பேயியம், பயங்கரியம், பங்கரியம் என்ற பல நிலை "பார் வை"ப்புகள் அனுப்பும் ஆளை, சஞ்சிகையைப் பொறுத்துண்டு. இவ்வாறான இடுக்கண்களைத் தனிக்கட்டுரையாகவே எழுதி இன்னொரு நாள் நகுவோம்.
இதுபோக, இப்போதெல்லாம் ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் இந்திய அரசின் மேல் & அடிமட்டச்செயலாளர்களுக்கும் இலங்கை, பாக்கிஸ்தான் பிரச்சனைகளைப் பற்றி அறிந்ததுபோல எழுதுவது, ஓய்வூதியத்துக்கு மேலே சுக்கான்புகைபிடிப்பதற்காக கைச்செலவுக்காகி வருகிறது. ஹரிஹரன், மல்ஹோத்ரா, ராமன், வரிசையிலே வாசன் இப்போது சேர்ந்திருக்கிறார். ராமனுக்கு பாக்கிஸ்தான் போல ஆளாளுக்கு ஓர் அதிபற்றுநிலை உண்டு. பசுவைப் பற்றி ஒன்பது வசனங்கள் எழுதிவிட்டு, பத்தாவது வசனமாக இலங்கைப்பனைமரத்திலே பாக்கிஸ்தான்பசுவைக் கட்டுவதிலே நம்மாள் ராமன் அசல் கோ தண்ட ராமனேதான். விட்டால், பிரபாகரன் பெண்டிலுக்கு பிரசவம் பார்த்ததே பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ என்று மெட்ராஸ்ஐ கொண்டு எழுதக்கூடியவர் எம் சீமான்.
கிளிநொச்சியிலே புலிகள் போனாலும் போனார்கள். ஆய்வுக்கட்டுரைகளின் கொட்டுரைகள் தாங்கமுடியவில்லை. கீழுள்ள கொடுமையைப் பார்க்கவும்.
The endgame in Sri Lanka
The murder in 1993 of LTTE deputy commander Gopalaswamy Mahendrarajah on the orders of LTTE chief V. Prabhakaran was the first major blow
http://www.livemint.com/2009/01/04214328/The-endgame-in-Sri-Lanka.html?h=B
"But more importantly, in organizational terms, by 2008, the LTTE had lost all its founders and top commanders."
எங்கிருந்து இந்த ஆதாரம் வந்தது என்று எடுத்து ஆண்டவனுக்கும் எடுத்துக் கொடுத்தவனுக்குமேதான் வெளிச்சம். இப்போது பிரபாகரன் ஒளித்திருக்கும் இடம் மட்டக்கிளப்பிலிருந்து மானாமதுரைவரைக்கும் எங்கேயாவது இருக்கலாமென்று உறுதியாகச் சொல்கின்ற ஆய்வுவல்லுநர்கள் ஊடகத்துக்கு நாலு பேரும் பதிவுகளுக்குப் பத்துப்பேரும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. Psychics have overtaken the professions of writing pubertal political history and mind-boggling military analysis.
பல இடங்களிலே "விடுதலைப்புலிகள்தான் சமாதானப்பேச்சுவார்த்தைகளிலேயிருந்து நீங்கினார்கள்" என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றது. அண்மையிலே விடுதலைப்புலிகளின் நடேசன் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருப்பதாகவே சொல்லப்பட்டபோதும் இந்தியாவின் மெத்தப்படித்தவர்களின் ஆங்கில ஊடகங்களிலேயும் புலம்பெயர் அரசுசார் தமிழ் ஊடகங்களிலும் இதே வ ழியிலே பகடி செய்யப்பட்டது. இத்தனைக்கும் நோர்வேயின் சார்பிலே நடுநிலை இடைத்தரகராக வந்தவரே ஸ்ரீலங்கா அரசின் பின்னெடுப்பினைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். குறைந்தது இக்கட்டுரை அத்தவற்றினையேனும் விடாமற் சொன்னதற்காக மகிழ்ச்சியடையவேண்டும்.
"In January last year, the Sri Lankan government withdrew from the ceasefire agreement."
என்ன தாறுக்கும் மாறுக்குமாக சம்பந்தசம்பந்தமில்லாமல் இவற்றினைச் சொல்லி உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று குழம்புகிறாயா, நண்பா? நிகழ்வுகள் நடக்கும்போது, நானுமிருக்கிறேன் என்பதைக் காட்டுவதுபோல, வலைநிலைவர்ணனை கொடுக்காமல், ஆற அமர இருந்து அவதானித்து அலசு. இடைப்பட்ட காலத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏதும் செய்ய முயற்சி செய். அரசியல் அலசல்களை அரைவேக்காடுகளுக்கும் அதை வைத்துப் பிழைக்கும் எச்சிற்கலைநாய்களுக்கும் விட்டுவிடு.

Labels: expat experts, penny per para commentators, political analysts, retired military officers