Friday, May 01, 2009
பாரதப்பத்திரிக்கையாளர் மு. வி. நந்தினி விடாத பின்னூட்டம்
மு. வி. நந்தினி என்ற பாரதப்பத்திரிக்கையாளரின் "இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை" என்ற இடுகைக்கு அவரின் பதிவிலே பின்னூட்ட அனுமதியில்லை. இந்திய பப்பராசிகளிடம் இதை எதிர்பார்க்காமலிருக்கமுடியுமா? அதனாலே, அவரின் "(நட்சத்திரப்பதிவராக எழுதமுடியவில்லை என்பதற்காக) மன்னிப்பு கோருகிறேன்" என்ற பதிவிலே இட்ட யாம் இட்ட பின்னூட்டம். தோன்றவில்லை.
அதனாலே இங்கே அவரின் இடுகையும் யாமின் பின்னூட்டமும்:
“குடிக்கத் தண்ணி வேணும்“ என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்‘ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான்
அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்‘ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம்
இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக்
கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து
ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை
ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து
அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச்
செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான். சிங்கள அரசியல்வாதிகள்தான் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் எனில் தமிழன் இன்னொரு தமிழனை கொல்வதை எந்த வகையில் சேர்ப்பது
? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய
செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்‘ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த
அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக
கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும்
சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப
சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.ஈழத்தமிழர் போராட்டத்தையும் இன்னல்களையும் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்தும் தமிழக
அரசியல்வாதிகளைப்போல சாகச மனநிலையில் அணுகும் பெருங்கும்பல்கள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிறது என்ற ஷோபா சக்தியின் கூற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன்
. உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது!
இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன்
என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!
.............
நீங்கள் உங்களுடைய இலங்கைத்தமிழர் (ஈழத்தமிழரைச் சொல்கிறீர்களோ?) பற்றிய இடுகையிலே பின்னூட்டத்தினை அனுமதிப்பதாகத் தெரியவில்லை.
சி. புஸ்பராஜா, அ. மார்க்ஸ். ஷோபா சக்தி இவர்களைமட்டும் தேர்ந்தெடுத்து உசாத்துணை தரும் உங்களைப் போன்றவர்களிடம் இப்படியான செயற்பாட்டினை எதிர்பார்க்கவேண்டியதுதான்.
நீங்கள் சுட்டியவர்களின் சாகசங்கள் பற்றி உங்களைவிட அதிகம் அறிந்தவர்கள் என்ற அளவிலே நாங்கள் பட்டியலிடலாம். என்ன செய்வீர்கள்? புலி ஆதரவாளர்கள் என்று ஓரங்கட்டிப் பட்டியலிடுவீர்கள். தமிழ்ச்செல்வன், மாதவராஜ் போன்ற பல பொய்யுடமைவாதிகளைப் பார்த்தாகிவிட்டது. எல்லோருக்கும் தமக்குச் சிக்கல் வராதவரைக்கும் வசதிக்குப் பொதுவுடமையும் மனிதாபிமானமும்
தேவைப்படுகிறது. இவ்வகையிலே நடைமுறைக்குத் தப்பித்துக்கொண்டு, சுற்றியிருப்பவர்களிடையே பெரிய மனிதாபிமானப்போர்வார்ப்புண்ணாக்கு என்று பெயரெடுப்பதற்கு இப்படியான 'இலங்கைத்தமிழர்கள்' (ஸ்ரீலங்கா தமிழர்களோ?) பற்றிய பதிவுகள் சிலருக்கு அவசியமே.
இன்னமும் எழுதலாம். எதற்கு? அலுத்துவிட்டது. சோனியா அம்மையாருக்கும் நந்தினி அம்மையாருக்கும் பெரிய வேறுபாடில்லை; இருவருக்கும் 'மனிதாபிமானமும்' 'விலங்குப்பண்பெதிர்ப்பும்' பொங்கி, பொங்கற்பானையிலிருந்து வழிந்தோடுகிறது.
எதற்கும் அ. மார்க்ஸ் பற்றி திரேதா(தாரகா?) எழூதி கீற்றிலே வந்த கட்டுரையையும் படித்துவிடுங்களே? இந்தியப்பத்திரிகையாளர்களைப் பற்றி எமக்குப் பெரிதும் மதிப்பில்லை. அதனாலே, இத்தோடு நிறுத்திவிடுகிறோம்.
இப்பின்னூட்டம் அனுமதிக்கப்படுமென்ற நம்பிக்கையில்லை. ஆனால், பதிவுலகிலே இதனைப் பார்வைக்குக் கொண்டு செல்வது அத்துணை கடினமில்லை என்பதை உணர்வீர்களென்று நிச்சயமாக நம்புகிறோம்.

Comments:
<< வீடு
பிற இனத்தவருக்கு தழிழர் மீது உள்ள அபிமானம் கூட எம்மினத்தவர்க்கு இல்லை. இவர்கள் வாய் கிளிய புலிகளை விமர்சிப்பார்கள் ஆனால் இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்டால் தெரியாது. புலிகள் ஒரு வேளை இல்லையென்றால் இலங்கையில் உள்ள தமிழர்க்கு என்ன நடக்கும் என்பதை 70 க்கு முன்பு நடந்த வரலாற்று சம்பவங்களை புரட்டி பார்த்தால் தெரியும். தற்போதே மொனறாகலை மாவட்டத்தில் வசித்த இந்திய வம்சாவளியினர் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டு அடக்கிஒடுக்கப்பட்டுள்ளனர். இரத்த்தினபுரிமாவட்டத்தில் ஆண்டாண்டு நடக்கும் தேர்த்திருவிழா நிறுத்தப்படடுள்ளது. இவை வெறும் ஆரம்பம்தான். போக போக எல்லைகிரமாங்களில் கலவரங்களை உண்டு பண்ணி சிங்களவர்களை குடியேற்றும் பழைய வரலாறு திரும்பும் ஆபத்து இருக்கிள்றது. அப்போது இவர்கள் எங்கே கொண்டு சென்று முகத்தை வைத்துக்கொள்ளப்போகின்றனர். அப்பவாவது தங்கள் எஜமானர்களை எதிர்த்து குரல்கொடுக்கும் வல்லமை இருக்கின்றதா???
//சி. புஸ்பராஜா, அ. மார்க்ஸ். ஷோபா சக்தி இவர்களைமட்டும் தேர்ந்தெடுத்து உசாத்துணை தரும் உங்களைப் போன்றவர்களிடம் இப்படியான செயற்பாட்டினை எதிர்பார்க்கவேண்டியதுதான்.//
இவர்கள் அனைவரும் ஒரு அப்பாவித் தமிழன் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதற்க்கு இதுவரை குரல் கொடுக்காதவர்கள். ஆனால் புலிகள் ஒரு சமூகத் துரோகிக்கு ம்ரண தண்டனை கொடுத்தால் உடனே புலிப்பாசிசம், அராஜகம் என கூக்குரலிடுவார்கள்.

சி. புஸ்பராஜா, அ. மார்க்ஸ். ஷோபா சக்தி இவர்க india army panniya aragakam pattri ondum eluthamattarkal.
ella eelathamilarkalum nallavarkal illai. atharkkaka neengal kaviri pirachanaiyiil tamilkalil thirudarkal irukkirarkal endu pesamal viduveerkala. illai thaane. thayavu saithu tamillarkalukkaka pesungal. ipoothathvu. illai endarl vangum kasukuu neengal enna saivathaiye saiyungal.

நான் எழுதிய பின்னூட்டமும் வெளியிடப்படவில்லை.
புலிகள் நேபாள மாவோக்களைப் போல ஆயுதங்களைக் களைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்னும் தொனியில், புலிகள் நடைமுறை பிழை என்னும் வகையில் எழுதப்பட்ட பதிவில், அப்படியானால் ஆயுதங்களைக் கைவிட்டு இன்று மகிந்த அரசில் அங்கமாக இருக்கும் முன்னாள் போராளிகளால் எதைப் பெற முடிந்தது என்று கேட்டிருந்தேன்.
அத்தோடு தோழர் மயூரனின் இன வேறு பாடு கடந்த வர்க்கப் புரட்சி பற்றிய பின்னூட்டத்துக்கு, சன்முகதாசான் காலம் முதல் இதைத் தானே சொல்லி வருகிறீர்கள், இது ஏன் சாத்தியப் படவில்லை என்றும் கேட்டு எழுதி இருந்தேன்.
இவர்களின் கருத்துச் சுதந்திரம் சத்தியக் கடதாசி போன்றது என்பதை நிரூபித்து விட்டார்.

இவர்களுக்கு எல்லாம் பதில் எழுதி காலத்தை வீணாக்க வேண்டுமா?
குழந்தைகள் சாகிறார்கள். இவரை ஒரு பொருட்டாக எண்ணி பதில் எழுதும் உங்களை சுடவேண்டும்.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,1894410_1894780_1894784,00.html
She talks about the tamil issue in her interview for Time-100
Producer, DJ, singer, fashion designer. Sri Lankan (sic & sucks) pop star M.I.A. has global influence across many genres. That put her on this year's TIME 100

என்னத்தைச் சொல்ல? அவர் யார் யாரை வாசிக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய கருத்தும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்போதிருக்கும் அவலத்தில் இது வேறா? ஈழத்தமிழர்களுக்கு உதவிசெய்யாவிட்டாலும் பரவாயில்லை. எதிரிக்கும் எதிரியின் சார்புநிலையை எடுப்பவர்களுக்கும் சாதகமாக அமையக்கூடிய பேச்சையாவது சற்றைக்கு, இக்காலகட்டத்தின் கொடுநிலையை முன்னிட்டு நிறுத்திவைக்கலாம். இது ஒரு வேண்டுகோள்தான். அவருக்குத் தோன்றியதை எழுத வேண்டாம் என்று தடுக்க எங்களுக்கு உரிமையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
'பாரதப் பத்திரிகை'யாளரா? மு.வி.நந்தினி ஆனந்தவிகடனில் வேலை செய்கிறவர். ஆனந்த விகடன் அண்மைய காலங்களில் ஈழத்தமிழருக்குச் சார்புநிலைப்பாட்டுடனேயே செய்திகளை வெளியிட்டுவருகிறது. பல அழுத்தங்களை, நெருக்கடிகளை எதிர்கொண்டபோதிலும் தன்னால் முடிந்தவரை இலங்கை அரசின் கொடூரமுகத்தை அம்பலப்படுத்தி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் இவர் மட்டும் ஏன் ஏறுக்கு மாறாகப் பேசுகிறார் என்பது புரியவில்லை.
இறுதியாக… நன்றி!
மே 2, 2009
நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்தமைக்கு நான் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநாமதேயப்பின்னூட்டக்காரருக்கு, நீங்கள் யாரென்று தெரியவில்லை. சொன்ன கருத்தின்படி பார்த்தால், நீங்கள் பதிவர் மூவி நந்தினி என்றால் மட்டுமே கீழேயுள்ள பதில். அவர் இல்லாமல், குளறுபடிகளைச் செய்கிறவரென்றால், மேலும் குழப்படிகளைச் செய்து கறுப்புப்பட்டி உயர்தரத்தினை அடைய வாழ்த்து.
பதிவர் மூவி நந்தினி என்பவரே அநாமதேயப்பின்னூட்டக்காரரென்றால்,
1. தமிழ்மணம் உங்கள் பதிவுக்கான இணைப்பினை விலக்கியிருக்குமென்று நீங்கள் கருதினால், நீங்கள் தமிழ்மணத்திடம் கடுமையான கண்டனத்தினைத் தெரிவியுங்கள். அதனை நானும் சேர்ந்து கண்டிக்கிறேன்.
இங்கே அநாமதேயமாக அதைப் பற்றிப் பின்னூட்டி எதுவும் ஆகப்போவதில்லையே? :-(
2. தமிழ்மணம் அப்படியாகச் செய்யவில்லை என்பதாகத்தான் நான் நம்புகிறேன். ஏனெனில், உங்கள் குறிப்பிட்ட இடுகையினைத் தமிழ்மணத்தினூடாக நான் வாசிக்க முதலிலே அணுகியபோது, அது கிடைக்கவில்லைhttp://tamilmanam.net/forward_url.php?url=http://mvnandhini.wordpress.com/2009/05/01/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%25-2/&id=353874. அதனால், உங்கள் பதிவின் முகப்பூடாக அணுகினேன். அங்குப் பார்த்தபோது, நீங்கள் குறிப்பிட்ட இடுகையினைத் தனியே நிரந்திர இணைப்பூடாக வாசிக்கும் வழியினையும் (permanantlink) பின்னூட்டுவகையினையும் தடை செய்திருப்பது தெரிந்தது. அதனாலேயே, இங்கே உங்கள் இடுகையின் உள்ளடக்கத்தினை அப்படியே ஒத்தி, ஒட்டி என் பின்னூட்டத்தினை இட முடிந்தது. நீங்களே தனி இடுகையாக வாசிக்கும் முறையினைத் தடுத்தபின்னால், தமிழ்மணத்திலிருந்து நேரடியாக ஆங்கே சென்று வாசிக்க முயலுகையிலே, குறிப்பிட்ட 'இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை' இடுகை தோன்றாததொன்றும் வியப்பல்லவே. அவ்விடுகைக்கான இணைப்பு தமிழ்மணத்தூடாக, தொடர்ந்தும் அணுகமுடியும்வகையிலே தமிழ்மணத்திலே இருப்பதாலேயே, உங்கள் இடுகை இல்லாத இணைப்பு சூடாகி நேற்று மேலே எகிறி "சூடானபதிவுகளிலே" நின்றது. இன்னமும் உங்கள் நட்சத்திரப்பதிவுத்தலைப்பிலே அத்தலைப்புத்தானே மேலே நிற்கிறது.
உங்கள் தெரிந்து திட்டமிட்ட செயற்பாட்டுக்கு அல்லது தெரியாது எதேச்சையாக நிகழ்ந்த தொழில்நுட்பக்குறைபாட்டுக்குத் தமிழ்மணத்தினைக் குற்றம் சாட்டுவது, ஷோபா சக்தி+அ.மார்க்ஸ்+சி.புஸ்பராஜா இவர்களின் சில கோணற்குறிப்பேடுகளை வைத்துக்கொண்டு மனிதநேயசாகசம் செய்யும் உங்களிடம் எதிர்பார்க்ககூடியதே.
3. சரி, உங்களின் அடுத்த- நட்சத்திரப்பதிவினைத் தொடர்ந்து இடமுடியாத நெருக்கடி பற்றிய- இடுகையிலே யாம் இட்ட இப்பதிவிலே செவ்வெழுத்திலே தோன்றும் பின்னூட்டம் தோன்றாதேனோ? வல்லிசிம்ஹன் அம்மாளின் "பலே ஜோர்" வகையறா பின்னூட்டம் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறதே? இதுவும் தமிழ்மணத்தின் உங்கள் கருத்துச்சுதந்திரத்துக்கெதிரான சதிவேலைப்பாடுதானோ?
4. தமிழ்மணத்தின்மீதான ஆசிகளை அதனிடம் வைத்துக்கொள்ளுங்கள்; வாதங்களைமட்டும் என்னிடம் வைத்துச்செல்லுங்கள்.
தமிழ்மணம் பாரத ஊடகங்களின் தன்மை கொண்டதாகவில்லை என்பதாகவே நான் இன்னமும் கருதுகிறேன். அவ்வகையிலே உங்களின் பட்டாணிக்கடலை வறுக்கும் இடுகையினைத் தவிர்த்துமட்டும் விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுகின்றார்கள் என்ற மாயையை வளர்த்துக்கொள்ளாதீர்கள். (யாம் உட்பட) அவரவர் அவரவர் உயரங்களை அளந்து அறிந்து கொள்ளுதல் நன்று.
நன்றி.

நேற்றிலிருந்து இன்றுவரைக்கும் மூவி நந்தினி அவர்கள் சில மாறுதலைச் காட்டியிருக்கிறார் - அவரின் பதிவிலே. அவரின் 'இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை' இடுகை இப்போது, சொடுக்கினால், வேலை செய்கிறது...."Error 404 – File not Found
Sorry, but the page you were looking for could not be found." என்பதாக. அருமை; தமிழ்மணமேதான் அதனை அவர் பதிவிலே புகுந்து விலக்கியிருக்கவேண்டும்.
2. அவரின் மன்னிப்புக்கோருகிறேன் பதிவிலே முதலாவதாகவும் ஒன்றையாகவும் நேற்றிரவுவரை நின்ற "பலே ஜோர்" பின்னூட்டமொன்றைக் காணவில்லை. பதிலாக, யாம், தமிழ்நதி, (புலியற்ற) பூனை உட்பட இட்டு ஏழு பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
பாரதப்பத்திரிகையாளர்களின் சாகசமே தனி வகைதான்!

கேட்கமாட்டாருன்னுதான் தோணுது. இணைய ஊடக அடக்குமுறைக்கு எதிரா போராடணுமில்லையா? தமிழ்மணமே அடக்கி வாசி. விகடனுல தமிழ்மணம் பத்தி கிழிச்சிடப்போறானுங்க.
@தமிழ்நதி, பெரும் ஊடக நிறுவனங்கள், அவற்றில் வேலைபார்ப்பவர்கள் பற்றிய உங்கள் அருமந்த கருத்துக்கள் சிலிர்ப்பூட்டுகின்றன.
@தமிழ்நதி, மன்னிக்க வேண்டுகிறேன்.
எனது முதல் பின்னூட்டம், ஆனந்த விகடனில் வேலை செய்வது குறித்து எழுதிய அனானி-க்கானது. இவ்வலைப்பதிவில் பின்னூட்டங்கள் தோன்றும் முறை வித்தியாசமாய் இருக்கிறது. பின்னூட்டம் இடுபவரின் பெயர் பின்னூட்டத்தின் கீழ்தான் வருகிறது (கையொப்பம் இடுவதைப் போல!)
தவறுக்கு வருந்துகிறேன், ஜூலியன்.

ஏர்சின் அய்யரே நீர்மட்டும் buy sri lanka, புகலி இணைப்புகளை உம்முடைய பாரிஸ் தலைமையத்தின் கட்டளைப்படி அனுப்பித் திரிகிரீரே. உமக்கு கச்டமாய்தான் இருக்கும்
அனானி,
ஆம், கஷ்டமாய்த் தான் இருக்கிறது.
உங்களுக்கு என்ன பதில் சொல்கிறது என்று தெரியவில்லை.
அவர்களைக் கேட்டு எழுதுகிறேன். :)
அய்யர் என்பதை ஞாபகமூட்டியதற்கு மிக்க நன்றி.
உங்களுக்கு நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்!

அவர்கலை நேரடியாக கேட்பீர்களோ? நிர்மலா, ராகவன் இவர்களிடம் அனுமதி பெர்ரு தான் கேப்பீர்களோ
அய்யர் எண்று பெயரில் ஒட்டி வைத்தல் அய்யர் தானே
உங்கலுக்கும் நல்ல நால் அமைய வாழ்துகல்

:-S
அனானி, மீளவும் நன்றிகள், ஞாபகமூட்டியமைக்கு.
என மறதியை அவர்கள் பொறுத்தருள்வார்களாக.
ஆம், மேன்மைதங்கிய அவர்களுடன் சேர்த்தே இலங்கை உயர்ஸ்தானிகர்(பிரிட்டன்)அவர்களிடமும் நான் அனுமதி பெற்றாகவேண்டும் இல்லையா?
அனுமதி எல்லாம் கிடைத்து, பிறகு பதில் கிடைத்ததும் கேட்டு எழுதுகிறேன்.
ஆம், ஆம், நீங்கள் சொன்னால் மறுப்பென்ன, நான் அய்யர்தான்.

Urchin, அநாநி தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமில்லாத சண்டைகளை வேறு எங்காவது இடலாமே? எதற்கு இங்கே திசை திருப்பல்?
Post a Comment
<< வீடு