Sunday, May 03, 2009

பத்திரிக்கையாளர் மூவி நந்தினிக்கும் அவரின் குளறுபடி இடுகைகளுக்கும்

மூவி நந்தினி தன்னுடைய பதிவிலே இப்படியாக இன்று எழுதியிருக்கின்றார்.

/நண்பர் ஜூலியன், உங்களுக்கு என்மேல் அப்படியன்ன பகையோ தெரியவில்லை…தொடர்ந்து நான் செய்ததற்கு, செய்யாததற்கு நீங்களாக அர்த்தம் கற்பித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நேற்று உங்களுடைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டேன்.

“நண்பரே, என்னுடைய பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. பின்னூட்டம் போடவும் முடியவில்லை. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நடுவில் இரண்டு நாட்களாக இணைய இணைப்பு வேறு இல்லை. பின்னூட்டத்தை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒரு பின்னூட்டத்தை தவிர எனக்கு வந்த எல்லா பின்னூட்டங்களையும் தான் அனுமதித்திருக்கிறேன். உங்களுடைய கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்பதற்காக என்னை தனிப்பட்ட முறையில் ஏன் தாக்குகிறீர்கள்?”/


மூவி நந்தினி,
இப்படியான எந்தப்பின்னூட்டத்தினையும் நான் இப்பதிவிலே பெறவேயில்லை. நீங்கள் வேறெங்கேனும் இட்டிருந்தால், அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இப்பதிவிலே இது மாதிரியான எப்பின்னூட்டமும் வரவில்லை. பொய் சொல்லாதீர்கள். நம்பமறுப்பீர்களானால், அடுத்த பதிவிலே என் ஜிமெயில் கணக்கின் கடந்த சிலநாட்களின் ஒவ்வொரு அஞ்சலையினையும் படமெடுத்துப் போடத்தயாராகவிருக்கின்றேன். பார்க்கின்றவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும். உங்களுடன் எனக்கு ஏதும் பிரச்சனையில்லை. ஆனால், நீங்கள் எழுதிய பின்னூட்டத்தினை விடாது வேறொரு அம்மணியின் பின்னூட்டத்தினை விட்டிருந்தீர்கள். பின்னால், என்னுடைய இவ்விடுகை வந்த பின்னால், எல்லாப்பின்னூட்டத்தினையும் அனுமதித்திருக்கின்றீர்கள். அதிலும் யாமின் பின்னூட்டம் முதலாவதாகவிருக்கின்றது. அப்படியானால், அதற்கு முன்னால் அதுவரை அனுமதிக்கப்பட்டிருந்த அம்மாளின் பின்னூட்டம் என்னவாயிற்று?

shame on YOU! பொய்களை அடுத்தடுத்து முகத்திலேயறைந்தாற்போல சொல்லாதீர்கள். ஒரு பாரதப்பத்திரிக்கையாளருக்கு அவசியமோ என்னவோ, ஓர் நேர்மையான சமூகநீதி நெறி பற்றி பந்தி பந்தியாக, வண்டி வண்டியாகப் பத்தியெழுதும் பத்திரிகையாளருக்கு முறையானதல்ல. நேற்று மாதவராஜ் என்கிற பொய்யுடமைவாதியுங்கூட அவருடைய திரிஷா, ஜோதிகா இடுகைக்கு இட்ட பின்னூட்டத்தினை அனுமதிக்கவில்லை. ஆனால், அவருடைய ஜால்ராகளின் பின்னூட்டங்களை விட்டிருந்தார். கலை, கவிதை இவற்றினை விமர்சிக்கும் பொதுவுடமைவாதிகள் ஈழத்தமிழர்களின் நிலையை மட்டும் அப்படியே மறுப்பதன் காரணத்தினை மூன்று வரிகளிலே கேட்டிருயிருந்தேன். அவரால் விடமுடியவில்லை. கேவலம். இப்படியான சமூகநீதிகேட்கும் ஆசாமிகள் வெறுப்பினை ஏற்றுகின்றார்கள்; ஏமாற்றத்தினை விதைக்கிறார்கள் - குறிப்பாக நமக்கு உவப்பான அரசியல்சார் தத்துவங்களைக் கொண்டவர்கள் என்று எண்ணும்போது.

ஆனந்தவிகடனைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை - வந்த நீங்கள் ஆனந்தவிகடனிலே தொழில் புரிவதாக வந்த ஒரு பின்னூட்டத்தினை அனுமதித்தது தவிர. எதற்காக உங்கள் புதிய பதிவிலே ஏதோ நான் ஆனந்தவிகடனை உங்களுடன் சேர்த்து இழுப்பதாக எழுதுகின்றீர்கள்? "என்னைத்தான் தாக்குகிறீர்கள் என்றால் தொடர்புள்ளதாகக் கூறிக்கொண்டு அவர்களை ஏன் தாக்குகிறீர்கள்? என்னுடைய பதிவுக்கான எதிர்வினை என்பது போய் முழுக்க முழுக்க என்னைப்பற்றிய தனிப்பட்ட தாக்குதலில் நீங்களும் உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிடும் சிலரும் இறங்கியிருக்கிறீர்கள்." வாசிப்பதனைப் புரிந்துகொள்ளும் பதிவர்களுக்கு அது புரியாதென்றா எண்ணுகின்றீர்கள்?

உங்கள் இணைய இணைப்பினைச் சார்ந்த சிக்கல்களைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களையும் புரிந்துகொள்ளமுடிகின்றது. ஆனால், யாமின் பின்னூட்டத்துக்குப் பின்னால் வந்த ஒரு பின்னூட்டம் ஒரு முழுநாள் நின்று மறைந்து பின்னால், யாமின் பின்னூட்டம் முதலாவதாகத் தோன்றியதற்கும் இணைய இணைப்புக்கும் என்ன சம்பந்தமிருக்கமுடியும்? தனியே நீங்கள் தீர்மானிக்கும் செயலல்லவா அது?


மேலும் கீழேயுள்ளதுதான் நேற்று இவ்விடுகைக்கு வந்த பின்னூட்டம்

/இறுதியாக… நன்றி!

மே 2, 2009

நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்தமைக்கு நான் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்./


இதற்கான பின்னூட்டமாகவே நான் பதிலளித்திருந்தேன் - அதுவும் மிகவும் தெளிவாக முகப்பிலே, "இது மூவி நந்தினி இட்ட பின்னூட்டமென்றால் மட்டுமே என் கீழ்கண்ட பதில்" என்று அறுத்துறுத்துச் சொல்லியிருந்தேன். வேறேதும் அநாமதேயமென்றால், 'விட்டுப்போ' என்று சொல்லியிருந்தேன். அதை நீங்கள் வாசிக்கவில்லையா?

சரி மேலேயுள்ளது நீங்கள் இட்ட பின்னூட்டமில்லை என்றே கொள்வோம். அப்படியானால், உங்கள் "இறுதியாக… நன்றி!" இடுகையிலே நீங்கள் எழுதியதைப் பாருங்கள்.

/இறுதியாக… நன்றி!
மே 2, 2009

நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்தமைக்கு நான் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்./


யாரோ அநாமதேயமேதான் எடுத்து என் இடுகையிலே போட்டதென்றுகூட வைத்துக்கொள்வோம். ஆனால், மேற்கூறிய உங்கள் இடுகைக்கும் என் இவ்விடுகையிலே வந்த பின்னூட்டத்துக்கும் என்ன வேறுபாடு? அதே அநாமதேயமா உங்கள் பதிவிலும் இடுகை போடுகின்றார் என்று சொல்ல வருகின்றீர்கள்? உங்கள் சொந்தக்கருத்துத்தானே அது?

உங்களுடன் எனக்கேதும் பிரச்சனையில்லை; உங்களை உங்கள் நட்சத்திரத்தேர்வு தமிழ்மணத்திலே தோன்றும் வரைக்கும் யாரென்றும் தெரியாது. எதற்காக நான் உங்களுடன் நான் சண்டைக்கு நிற்கவேண்டும்? ஈழத்திலே பிரணாப் முகர்ஜி & சிதம்பரம் இவர்களின் கூற்றின் விதி வழியே இந்திய இராணுவ உதவியோடு குழந்தைகளும் கிழடுகளும் இறைச்சிக்கடைமாடுகள்போலச் செத்து விழுகின்றார்கள். இந்நிலையிலே இதைப் பற்றிக் கேள்வி ஒன்றுகூடக் கேட்க வக்கில்லாது, ஷோபா சக்தியின் தன்வயமான மாட்டுக்கருத்தினை மேலேற்றி முன்வைக்கும் உங்களைப் போன்ற மானுடம்சாறும்பாரதப்பத்திரிக்கைப்பிம்பங்களுடன் வம்பிழுத்துத்தானா இந்நிலையிலே நான் ஏதும் வெட்டிவிழுத்திச் சாதித்துவிடமுடியும்? பொய்யை முகத்திலே அறைந்ததுமாதிரியாகச் சொல்லாதீர்கள்.

இப்போது புதிதாக ஒரு பொய்யை இன்னொரு படையாகச் சொன்னதை, செய்ததை அல்லது செய்யாததைக் காத்துக்கொள்ள மேலே போர்த்துகின்றீர்கள். நீங்கள் சொல்லும் உங்கள் பின்னூட்டம் எதையும் நான் பெறவில்லை. அனுப்பியதாகப் பொய் சொல்லாதீர்கள். இப்பதிவு சம்பந்தப்பட்டு என் ஜிமெயிலுக்கு வந்த பின்னூட்டங்களை அனுப்பியவர்களின் அஞ்சல் தலைப்பகுதியை இங்கே இணைத்திருக்கின்றேன். வந்த அஞ்சல்களின் எண்ணிகையையும் இங்கே தோன்றியிருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்துக்கொண்டு, உங்கள் வராத பின்னூட்டம் அனுமதிக்கப்படவில்லையா என்று சொல்லுங்கள்.






உங்களை எனக்குத் தெரியாது; நீங்கள் யாரென்பதிலும் எனக்கு ஈடுபாடில்லை. இங்கே பின்னூட்டும் அநாநிகள் யாரென்றும் எனக்குத் தெரியாது. உங்கள் பதிவிலே பூனை தமிழ்மணத்தினைக் குறை சொல்லி எழுதும் பின்னூட்டங்களை அனுமதிப்பதுபோலவேதான், நானும் எனக்கு வரும் பின்னூட்டங்களை "நாயே பேயே உங்காத்த போயி..." என்றில்லாதபோது அனுமதிக்கிறேன். இடாத பின்னூட்டங்களுக்கே அனுமதிக்கவில்லை என்று அலறோ அலறென்று அலறும் பதிவர்களிடையே வந்த பின்னூட்டங்களை விடாது நான் தப்பமுடியுமென்று எண்ணுகின்றீர்களா?

உங்களை விட, கடந்த ஆறுமாதங்களிலே ஆத்திரம் காட்டமும் காத்திரமுமாகக் கொள்ள, கொல்ல இத்தனை நாள் இணையத்தூடாக இலக்கியம், திரைப்படம் பேசிப் பழகியும், இன்று ஈழத்தமிழர்பற்றி மூச்சே விடாது இளையராஜா, ஈரானியத்திரைப்படம் பேசும் இரக்கமற்ற மனிதாபினச்சுனையற்ற எத்தனையோ அசல் தற்றணிக்கைமைதுனக்குட்டையமிழ்எருமைமாட்டுநாகரீகநண்பர்கள் இருக்கின்றார்கள். எதற்காக அவர்களை விட்டுவிட்டு, உங்களின் கழுத்தைப் பிடித்து நான் நெரிக்கவேண்டும்?

கடைசியாக, மாற்றுக்கருத்துகளை மாற்றுக்கருத்துகளாலே எதிர்கொள்ளவேண்டுமென்று எழுதியிருக்கின்றீர்கள். சாகசவீரர்கள் ஷோபா சக்தி, அ. மார்க்ஸ், சி. புஸ்பராஜா அப்படித்தான் எதிர்கொண்டார்களா என்பது பற்றி தனி இடுகைகள் மூன்று எழுதுவது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால், நடைமுறையை அறிந்துகொள்ளாது இணையத்திலே இலக்கியமும் பாதுகாப்புடனிருந்து கொண்டு பத்திரிகை மனிதநேயமும் பேசும் போலிகளையும் போராளிகளையும் கண்டு அலுத்துப்போய்விட்டது. அதனாலே உங்களின் பதிவிலேயான என் பின்னூட்டம் அவை பற்றியதல்ல; ஆனால், ஸ்ரீலங்கா அரசு இன்று தமக்கான தலையாட்டித்தமிழ்த்தலைமைகளைத் தேடும் நிலையிலே மாற்றுக்கருத்துகள் என்ற பெயரிலே நீங்கள் சுட்டும் ஆட்கள் (இருப்பவர்கள் & இறந்தவர்கள்) யாரென்று தமிழகத்தின் காகிதப்போராளிகள், அவரவர்க்கு அவரரது பொய்யுடமைவாதிகள், இணைய இளையராஜாவின் இட்டலிப்பானைகள் அறிந்து கொள்ளப் பதிவு செய்வது அவசியம். நேற்றுவரை ஈழத்தமிழர்கள் தொப்புட்கொடியுறவுகளே இல்லையென்று ஈழத்தமிழர்மீது காழ்ப்பினைக் கொட்டிய மண்ணிறஇந்தியநாட்சிகள் சிலர் இன்று ஈழம் எடுத்துக்கொடுக்கவேண்டுமென்று புரவலர்பேச்சினைப் பேசும்போது சுட்டிக்காட்டவேண்டும்.

I may be a stupid, but not an inborn moron.
we are powerless, but not brain dead yet.

You should be ashamed of yourself for lying on our faces

Comments:
நேர விரையம்
 
புரிகிறது. ஆனால், பொய்யை வைத்தே புனைகதை எழுதும் தமிழகவரலாற்றாசிறியர்கள், பத்திரிக்கையாளர்கள், பதிவார்கள் இவர்கள் தோழி (இந்த தோழர் தோழி பயன்படுத்தாவிட்டால், கடதாசிகம்யூனிஸ்டுக்கும் பிட்செட்பின்னவீனத்துவவாதிகளுக்குமிடையேயான வௌவால்தூங்குநரகத்திலே காலாகாலத்துக்கும் தலைகீழாய்த் தூங்கும் பாவம் நமக்கு வந்து சேரும்) நந்தினியின் கருத்தினைக் கேள்வி கேட்காமல் வரலாற்று ஆதாரம் காட்டக்கூடாதல்லவா?
 
Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?